மக்களே இந்த விமானத்தில் பயணம் செய்யும் போது உஷார்! அடுத்தடுத்து நடுவானில் ஏற்பட்ட பிரச்சினை!
சில விமான நிறுவனங்கள் தங்களது விமானங்களை சரிவர பழுது பார்க்காமல் இயக்கி வருகின்றனர். இதன் விளைவு மக்கள் நடுவானில் பயணிக்கும் பொழுது அல்லது சரக்குகளை ஏற்றி செல்லும் பொழுது ஏதேனும் கோளாறு ஏற்பட்டு விபத்துக்குள்ளாகி விடுகிறது. கடந்த ஆண்டு முதல் தற்போது வரை அதிக அளவில் நடுவானில் பறந்த விமானங்களில் கோளாறு ஏற்பட்டு விபத்துக்குள்ளாகியது நாம் அறிந்ததே. இதில் பல உயிர்களையும் இழக்க நேரிட்டது. அந்த வகையில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் விமானங்களில் தொடர்ச்சியாக பிரச்சனைகள் இருந்து வருகிறது. அவ்வாறு இருந்தும் அந்நிறுவனம் பாதுகாப்பற்றதாக விமானங்களை இயக்கி வருகின்றது.
இந்த இரண்டு மாதங்களில் மட்டும் இந்நிறுவனத்தின் விமானம் 6 முறை பாதுகாப்பற்ற முறையில் இயக்கி உள்ளனர். இதில் பலமுறை நடுவானில் கோளாறுகள் ஏற்பட்ட நிலையும் உண்டு. மேலும் பயணிகள் பயணம் செய்ய ஏதுவானதாகவும் தற்போது இல்லை. நேற்று கொல்கத்தாவில் இருந்து சீனாவுக்கு புறப்பட்ட விமானம் நடுவானில் கோளாறு ஏற்பட்ட விமானத்தை கொல்கத்தாவில் தரையிறக்கினர். இந்த விமானத்தில் பயணிகள் இன்றி சரக்கு ஏற்றி சென்றதால் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர். இதுவே பயணிகள் இருந்து நடுவானில் கோளாறுகள் ஏற்பட்டால் பல உயிர்களை இழக்க நேரிடும்.
இதனைத்தொடர்ந்து டெல்லியில் இருந்து துபாய்க்கு சென்ற விமானத்தில் எரிபொருள் நிரப்பும் இன்டி கேட்டரில் திடீரென்று ஏற்பட்ட பிரச்சனையால் அவசர அவசரமாக பாகிஸ்தானில் விமானத்தை தரையிறக்கினார்.இந்த நிறுவனத்தில் தொடர்ச்சியாக ஏதேனும் பிரச்சனைகள் இருந்து கொண்டே வருகிறது.இதனை கண்ட சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், மக்கள் பயணம் செய்யும் பாதுகாப்பான விமான நிறுவனமாக இல்லாதது குறித்து விளக்கம் அளிக்க கோரி கேட்டுள்ளது.