மக்களே எச்சரிக்கை! இந்த வயதினருக்கு புதிதாக பரவி வரும் தட்டம்மை நோய் பாதிப்பு!
கடந்த சிலதினங்களுக்கு முன்பு மும்பை கோவண்டி பகுதியில் தட்டமை என்ற நோய் பரவல் இருந்தது.அப்போது அந்த நோய் பாதிப்பினால் எட்டு பேர் உயிரிழந்தனர்.அதனையடுத்து தட்டம்மை நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால் மத்திய சுகாதாரத்துறை குழுவினர் மும்மையில் முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.அதன் பிறகு அவர்கள் அங்கு பரிசோதனைகள் மேற்கொண்டனர்.
மேலும் அவர்கள் இந்த நோய் பாதிப்பை குறைக்க 5 வயது முதல் 9 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வேண்டும் எனவும் மும்பை மாநகராட்சியிடம் கோரிக்கை வைத்தனர்.இந்நிலையில் நேற்று மும்பையில் உள்ள எம் வார்டு பகுதிகளில் மூன்று பேருக்கும் ,பாந்திர மற்றும் கார் பகுதிகளில் மூன்று பேருக்கும் ,ஜி தெற்கு வார்டு பாண்டுப் பகுதிகளில் தலா ஒருவருக்கும் என மொத்தம் எட்டு பேருக்கு தட்டம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி காய்ச்சல் மற்றும் சொறி போன்ற அறிகுறி உடையவர்கள் 3 ஆயிரத்து 36 ஆக உயர்ந்துள்ளது.இதில் நேற்று மட்டும் 176 பேர் புதிதாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மருத்துவமனையில் 11 நோயாளிகள் புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.தற்போது தட்டம்மை நோயாளிகளின் எண்ணிக்கை 73 ஆக உள்ளது.
மருத்துவமையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு 62 பேருக்கு சாதாரண சிகிச்சையும் 9 பேருக்கு ஆக்சிஜன் கொடுக்கப்பட்ட நிலையிலும் மேலும் இரண்டு பேர் வெண்டிலேட்டரிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.