மக்களே உஷார்! ஆறு மாவட்டங்களில் மட்டும் மிக கனமழைக்கு வாய்ப்பு!

0
199
People beware! Chance of very heavy rain in only six districts!

மக்களே உஷார்! ஆறு மாவட்டங்களில் மட்டும் மிக கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் வங்கக் கடலில் தெற்கு ஆந்திரம் ,வட தமிழகம் ,கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம் ,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும் கோவை ,சேலம் ,நீலகிரி ,ஈரோடு ,தர்மபுரி ,கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.இதனையடுத்து திருப்பூர்,தேனி ,மதுரை ,திண்டுக்கல் ,விருதுநகர் ,தென்காசி ,ராமநாதபுரம் ,கரூர் ,திருச்சி ,நாமக்கல் ,பெரம்பலூர் ,கள்ளக்குறிச்சி ,அரியலூர் ,கடலூர் ,விழுப்புரம் ,திருப்பத்தூர்,நாகை ,தஞ்சாவூர் ,புதுக்கோட்டை ,திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் ,அதுமட்டுமின்றி நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.