மக்களே உஷார்! வந்தது போலி கொரோனா தடுப்பூசி!
கொரோனா தொற்று அதிகமாக பரவி வரும் வேலையில் மத்திய அரசு பல நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது.அந்தவகையில் பேருந்தில் 50 சதவீதம் மட்டுமே மக்கள் பயணிக்க அனுமதி அளித்துள்ளனர்.
அதேபோல திரையரங்குகளில் 50% மட்டுமே படம் பார்க்க அனுமதிக்குமாறு தெரிவித்துள்ளனர்.
சந்தைகளின் அருகிலிருக்கும் சிறு அங்காடி கடைகள் வைக்க தடை விதித்துள்ளனர்.
வெளி மாநிலங்களிலிருந்து வரும் நபர்கள் கண்டிப்பாக இபாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
பூங்காக்கள்,கேளிக்கை விடுதிகள் என அனைத்து இடங்களிலும் 50% சதவீதம் மட்டுமே அனுமதி.
ஆட்டோக்க்களில் ஓட்டுனர் தவிர 2 பேர் மட்டுமே பயணம் செய்ய அனுமதி.
அதேபோல வாடகை கார்களில் செல்பவர்கள் கார் ஓட்டுனரை தவிர 3 பேர் மட்டுமே பயனம் செய்ய அனுமதி.
விளையாட்டு அரங்கங்கள்,மைதானங்கள் என அனைத்து இடங்களிலும் பார்வையாளர்களுக்கு தடை விதித்துள்ளனர்.
கொரோனா பரிசோதனை எடுத்த பிறகு படப்பிடிப்பு நடத்த அனுமதி.
தேநீர் கடைகளில் 50% பேர் மட்டுமே அனுமதி.
திருமணங்களில் 100 பேர் மற்றும் இறுதி ஊர்வலங்களில் 50 பேர் மட்டுமே கலந்துக்கொள்ள அனுமதி.
திருவிழாக்கள் நடத்த அனுமதி மறுத்துள்ளனர்.
தொழிற்சாலைகளில் வழிகாட்டு நெறிமுறைகளை கடிக்க வேண்டும்.மேலும் கொரோனா தடுப்பூசி போட அத்தொழிற்சாலை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு பல கட்டுப்பாடுகளை போட்டுவந்தாலும் கொரோனா 2 வது அலை அதி வேகமாக பரவி வருகிறது.அந்தவகையில் கொரோனா தடுப்பூசியிலும் போலி தடுப்பூசி வந்துவிட்டது.மக்கள் தடுப்பூசி போடவே முன் வராத நிலையில்,தற்போது கொரோனா தடுப்பூசி ரெம்டிசவர் போலி வெளியாகியுள்ளது.மத்தியபிரதேசத்தில் ரெம்டிசவர் தடுப்பூசிகளைக் கள்ளச்சந்தைகளில் விற்க முயன்றதாக ராஜேஷ் பாட்டிதர்,ஞாநேஷ்வர் மற்றும் அனுராக் என்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 12 தடுப்பூசிகள் கைப்பற்றப்பட்டது.இந்த தடுப்பூசி பாட்டில்களில் எம்.ஆர்.பி விலைகள் ஏதும் ஓட்டப்பட வில்லை.இந்த தடுப்பூசியை அவர்கள் ரூ.20 ஆயிரம் வரை விற்க முயன்றுள்ளனர்.அதன்பின் இந்த ரெம்டிசர் தடுப்பூசியானது கொரோனாவை தடுக்க அதிக அளவு ஆற்றலுடன் செயல்படுவதாக கூறுகின்றனர்.ஆனால் அவ்வாறு கூறும் ஏதும் அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவிக்கப்படவில்லை.இதனால் இந்த ரெம்டிசவர் தடுப்பூசிகள் கள்ளச்சந்தைகளில் விற்பனையாவது தொடர்ந்து நடந்தது தான் வருகிறது.