மக்களே எச்சரிக்கை! மாரடைப்பு ஏற்பட காரணங்கள் இதோ!

0
180

மக்களே எச்சரிக்கை! மாரடைப்பு ஏற்பட காரணங்கள் இதோ!

தற்போதுள்ள காலகட்டத்தில் மாரடைப்பு என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்களுக்கு வரை இயல்பாகவே ஏற்படும் பிரச்சினைகளில் ஒன்றாக மாறி வருகிறது. உடலில் அனைத்து இடங்களுக்கும் ரத்தத்தை சீராக அனுப்ப உதவும் உறுப்பாக இதயம் செயல்படுகிறது.

இதயத்திற்கு ரத்தத்தை அளிக்கக்கூடிய இடத்தில் கொழுப்புகள் அதிகம் உண்டாகுவதினால் இதயத்திற்கு சீரான முறையில் ரத்த ஓட்டம் செல்லாமல் மாரடைப்பு ஏற்படுகிறது. ரத்த ஓட்டம் குறைவதினால் இதய தசைகளுக்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் உணவு சத்துக்கள் கிடைக்காததினால் இதயத்துடிப்பு குறைந்து மாரடைப்பு ஏற்படுகிறது.

மாரடைப்பு ஏற்பட காரணங்கள்:

மன அழுத்தம் அதிகரிக்கும் பொழுது மாரடைப்பு ஏற்படுகின்றது. ரத்தத்தில் அதிக அளவு கொலஸ்ட்ரால் இருந்தால் மாரடைப்பு உண்டாகும். சர்க்கரை நோயாளிகளுக்கு மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. உடல் பருமன் அதிகம் இருந்தாலும் மாரடைப்பு ஏற்பட 50சதவீதம் வாய்ப்புள்ளது.

எந்த ஒரு வேலையிலும் ஈடுபாடு இல்லாமல் மற்றவர்களின் உழைப்பால் அனைத்து வேலைகளும் செய்து கொண்டு வந்தால் மாரடைப்பிற்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக புகைப்பிடிப்பவர்களுக்கும் மது அருந்துவார்களுக்கும் ஹார்ட் அட்டாக் வரும். மாரடைப்பு வராமல் தடுக்க முறையாக நடைப்பயிற்சி உணவில் பூண்டு, இஞ்சி சேர்த்துக் கொள்வது. நல்ல தூக்கம் போன்றவைகள் தான்.