மக்களே உஷார்! வெளியே செல்லும் போது இனி இது கட்டாயம்! போலீசார் வெளியிட்ட அறிவிப்பு!
கொரோனா தொற்றானது கடந்த இரண்டு ஆண்டுகளை கடந்து தற்பொழுது கட்டுக்குள் வந்துள்ளது. அதுமட்டுமின்றி மக்களும் விழிப்புணர்வுடன் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டு வருகின்றனர். தமிழக அரசும் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வாரம்தோறும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தி வருகிறது. இந்த முகாமினால் லட்சக்கணக்கானோர் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இரண்டு அலைகள் கடந்த நிலையில் மூன்றாவது அலை இந்த ஆண்டு இறுதியில் வரக்கூடும் என்று கூறினர். தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை தற்பொழுது மக்கள் முறையாக கடைப்பிடித்து வருகின்றனர்.அதனால் தொற்றின் பாதிப்பு குறைந்து காணப்பட்டது.
மேலும் மருத்துவ ஆராய்ச்சியில் மூன்றாவது அலையின் பாதிப்பு அடுத்த ஆண்டு இறுதிக்குள் தான் வரக்கூடும் என்று தெரிவித்துள்ளனர்.தற்பொழுது தீபாவளி பண்டிகை நெருங்கி வருகிறது. இதனால் மக்கள் அதிக அளவு கூட்டம் கூடுவர். அவ்வாறு கூடும் போது தனிமனித இடைவேளை கடைபிடிக்காமலும் முக கவசம் அணியாமலும் அரசாங்கம் கூறும் வழிமுறைகளை மீறி நடந்து கொள்வர். அதனால் மக்களை வழிமுறைகளை பின்பற்ற வைக்கும் நோக்கில் போலீசார் தற்பொழுது ஓர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில் அவர்கள் கூறியதாவது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பொருட்கள் வாங்க இருக்கும் பொது இடங்கள் , கடைவீதிகள் , மார்க்கெட் பகுதிகளில் முககவசம் சோதனை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.முக கவசம் அணியாமல் வரும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினர். இதுவரை சென்னையில் மட்டும் முக கவசம் அணியாமல் வந்த 5040 பேர் மீது தற்போது வரை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.அந்த வழக்கு பதிவு செய்து அவர்களிடம் இருந்து ஒரே நாளில் ரூ 10 லட்சத்து எட்டாயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினர்.அதனால் மக்கள் அனைவரும் பொது இடங்களுக்கு செல்லும் பொழுது முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.