மக்களே உஷார் இப்படியெல்லாம் நடக்கும் மோசடி! காணொளி மூலம் எச்சரிக்கை விடுத்த டிஜிபி!
மோசடி கும்பல் பல்வேறு வகையில் பொதுமக்களிடம் பணத்தை மோசடி செய்தால் ஏமாறாமல் இருக்குமாறு டிஜிபி சைலேந்திரபாபு காணொளி மூலம் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்களை இரிடியம் முதலீடு என்ற பெயரில் மோசடி கும்பல் பணத்தை ஏமாற்றி வருகிறது. என்று டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள காணொளியில் அறிவித்துள்ளார். மேலும் ஐந்து லட்ச ரூபாய் முதலீடு செய்தால் அடுத்த 2 ஆண்டுகளில் 3 கோடி ரூபாய் லாபமாக கிடைக்கும் என அந்த கும்பல் ஆசை காட்டி ஏமாற்றி வருவதாக அவர் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக சேலம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் கேரளாவில் இருந்தும் இது போன்ற மோசடி தொடர்பான வழக்குகள் தமிழ்நாடு காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் டிஜிபி தெரிவித்தார்.
இதனால் டிஜிபி சைலேந்திரபாபு காணொளி ஒன்றை மக்களுக்காக வெளியிட்டு இதுபோன்ற இரிடியம் முதலீடு என்ற பெயரில் ஏமாற்றி வரும் மோசடி கும்பலிடம் பொதுமக்கள் சிக்கி தங்கள் பணத்தை இழந்து ஏமாற வேண்டாம். உஷாராக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. என டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.