மக்களே உஷார்! இது இல்லையென்றால் கட்டாயம் அபராதம் ! அரசின் எச்சரிக்கை!
கொரோனா தொற்றானது முடிவடைந்து விட்டது என்று எண்ணி மக்கள் தற்போது தான் நிம்மதி அடைந்தனர்.அதுமட்டுமின்றி அனைத்து துறைகளும் எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி இயங்க ஆரம்பித்தது. இவ்வாறு தொற்று பாதிப்பு குறைந்த காரணத்தினால் அபராதங்கள் வசூலிக்கப்படுவதும் தவிர்க்கப்பட்டது.இந்நிலையில் இத்தொற்று மக்களை விடாமல் ஒவ்வொரு வருடமும் அடுத்தடுத்த கட்டத்திற்கு சென்று உருமாறி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது தென்னாப்பிரிக்காவில் கொரோனா தொற்றானது ஒமைக்ரானாக உரு மாற்றம் அடைந்துள்ளது. தற்பொழுது அனைத்து நாடுகளிலும் பரவி வருகிறது.
அதேபோல மத்திய அரசு இவற்றைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தி கொள்ளலாம் என அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. அந்தவகையில் மேற்குவங்க அரசு வரும் 10 ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு தொற்று பாதிப்பு காரண்மக விடுப்பு அளித்துள்ளனர். அதேபோல தமிழகத்தில் மாணவர்களின் நலன் கருதி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமே பாடங்கள் கற்பிக்க உத்தரவிட்டுள்ளனர். மேலும் மக்கள் நல்வாழ்வு மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது, தொற்று அதிவேகத்தில் பரவி வருவதால் மக்கள் நலன் கருதி பல்வேறு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.
மக்கள் அனைவரும் அந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தையும் முறையாக கடைபிடிக்க வேண்டும். அவ்வாறு கடைபிடிக்காத இருக்கும் அனைவருக்கும் கட்டாயம் அபராதம் விதிக்கப்படும் என்று கூறினார். அதுமட்டுமின்றி அனைத்து மாவட்டங்களிலும் விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் இருக்கும் மக்களிடமிருந்து அபராதம் வசூலிக்கும் படி அனைத்து மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் மக்கள் அனைவரும் வெளியே செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதேபோல சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அரசாங்கம் கூறும் விதிமுறைகளை மக்கள் கடைபிடிப்பதன் மூலம் அபராதம் கட்டுவதை தவிர்க்கலாம்.