Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மக்களே உஷார்….தமிழகத்தில் இன்று வெயில் அதிகரிக்கும்- வானிலை ஆய்வு மையம் தகவல்!!

மக்களே உஷார்….தமிழகத்தில் இன்று வெயில் அதிகரிக்கும்- வானிலை ஆய்வு மையம் தகவல்.

தமிழகத்தில் இன்று வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் சாா்பில் இன்று வெளியிட்ட அறிவிப்பு. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரியிலும் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி முதல் 104 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும்.மேலும் ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 7 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகமாக இருக்கக்கூடும்.அதிக வெப்பநிலை,அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் அதிகரிக்கும் இதனால் அசௌகரியம் ஏற்படலாம்.

மேலும் சென்னையை பொருத்தவரை அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 84 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.மேலும் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மேலும் இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் ஓரிரு இடங்களில் இடி,மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.இதனை தொடர்ந்து நாளை(ஆகஸ்ட் -2) முதல் வரும் ஆகஸ்ட் -6 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version