Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மக்களே உஷார்:! ஆண்களைக் குறிவைக்கும் வாட்ஸ்அப் நிர்வாண வீடியோகால்! பணம் பறிபோகும் அபாயம்!

மக்களே உஷார்:! ஆண்களைக் குறிவைக்கும் வாட்ஸ்அப் நிர்வாண கால்! பணம் பறிபோகும் அபாயம்!

சமீப காலமாக பெண்களை வைத்து வாட்ஸ் அப்பில்,ஆண்களை குறி வைத்து ரேண்டம் நம்பருக்கு நிர்வாண வீடியோக்கள் செய்யப்பட்டு,பணம் பறிக்கும் யுத்தி நடந்து வருகிறது.இதற்கு எடுத்துக்காட்டாக குஜராத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

குஜராத்தில் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ஒருவருக்கு வாட்ஸ் அப்பில் வீடியோ கால் ஒன்று வந்துள்ளது. அந்த வீடியோ காலில் பெண் ஒருவர் நிர்வாணமாக இருந்துள்ளார்.அவரும் ஆசைப்பட்டு அந்த வீடியோக்களை ஏற்று அவரிடம் உரையாடி உள்ளார்.அப்பெண் இந்த வீடியோகாலை பதிவு செய்து வைத்துக் கொண்டு ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியை பணம் கேட்டு மிரட்டி உள்ளார்.இவரும் வெளியில் தெரிந்து விடுமோ என்ற பயத்தில் அந்தப் பெண் கேட்ட பணத்தை கொடுத்துள்ளார். இதுவரை அந்தப் பெண், அதிகாரியிடமிருந்து சுமார் 17.80 லட்சம் ரூபாயை பரித்துள்ளதாக கூறப்படுகிறது.ஒரு கட்டத்தில் அந்த அதிகாரி இதற்கு மேல் பணத்தை இழக்கக்கூடாது என்று கருதி நடந்தவனவற்றை காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார்.

எனவே இது போன்ற வீடியோ காலை ஆசைக்கு இணங்கி ஏற்க வேண்டாமென்று காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஆபாச படம் பார்ப்பவர்கள் மற்றும் வெளியிடுபவர்களை கைது செய்யும் பணியில் சிபிஐ இறங்கிய நிலையில் தற்போது இந்த சம்பவம் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Exit mobile version