இனி அரசு பேருந்துகளை மக்களே டிராக் செய்யலாம்!! தமிழக அரசின் அசத்தல் திட்டம்!!
போக்குவரத்துறை அமைச்சர் பயணிகள் பயன்பெறும் வகையில் பஸ் செயலி என்பதை அறிமுக செய்ததோடு அதில் உள்ள அம்சங்கள் குறித்தும் விளக்கியும் கூறியுள்ளார்.
தற்பொழுது உள்ள அனைத்து மாநகர போக்குவரத்து பேருந்துகளிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ள நிலையில் பயணிகள் இந்த செயலை மூலம் விரைவு போக்குவரத்து எந்த நேரத்திற்கு எந்த இடத்திற்கு வரும் எத்தனை முன் பதிவுகள் நடந்துள்ளது என்ற வகையில் அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம் என கூறியுள்ளனர்.
அதுமட்டுமின்றி ஒரு இடத்திற்கு அரசு விரைவு பேருந்து ஆனது எத்தனை மணி நேரத்திற்குள் வரும் என்பதை கண்டறிவதோடு அது தற்பொழுது எந்த இடத்தில் உள்ளது என்பது வரை சர்ச் ரூட் ஆப்ஷனை என்பதை கிளிக் செய்து விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
மேலும் ஒரு பகுதியில் இந்த நேரத்தில் எத்தனை பேருந்துகள் செல்லும் அல்லது நீங்கள் செல்லும் பேருந்து மீண்டும் எத்தனை மணிக்கு வரும் என்ற வகையில் அறிந்து அறிந்து கொள்ளும் வசதி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக இந்த செயலியானது மகளிர்களுக்கு மிகவும் உதவும் வகையில் இருப்பதோடு அந்த பயணம் எவ்வாறு உள்ளது என்பது குறித்து தங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யும் வசதி உள்ளவாறு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறினார். அது மட்டுமல்லாமல் அடுத்த பேருந்து எத்தனை மணிக்கு வருவதை அறிந்து அதற்கு ஏற்ப திட்டமிட்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.