Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிரியாணி வாங்கிவிட்டு பணம் தராமல் ஏமாற்றிய நபர்கள்! தட்டி கேட்ட உரிமையாளருக்கு நேர்ந்த விபரீதம்!!

பிரியாணி வாங்கிவிட்டு பணம் தராமல் ஏமாற்றிய நபர்கள்! தட்டி கேட்ட உரிமையாளருக்கு நேர்ந்த விபரீதம்!!

கடையில் சாப்பிடுவதற்கு பிரியாணி பார்சல் வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் தப்பிச்செல்ல முயன்ற நபர்களை நிறுத்தி உரிமையாளர் பணம் கேட்டதற்கு அவரை தாக்கி விட்டு தப்பி ஓடி உள்ளனர். இந்த சம்பவம் சென்னையில் நடைபெற்றுள்ளது.

பிரியாணி என்றால் நிறைய பேருக்கு விருப்பம் அதிகம். ஏராளமான மக்களின் விருப்ப உணவாக பிரியாணி உள்ளது. அதற்கு சாட்சி தான் வீதிகள் தோறும் உள்ள பிரியாணி கடைகள். அது மட்டும் இல்லாமல் பிரியாணியில் ஏகப்பட்ட வகைகள் உள்ளதால் அசைவப் பிரியர்கள் மட்டுமில்லாமல் சைவ பிரியர்களுக்கும் ஏராளமான பிரியாணி வகைகள் உள்ளன. இத்தகைய பிரியாணியை வாங்கிவிட்டு நழுவ பார்த்த இரண்டு வாலிபர்கள் பணம் கேட்டதற்கு உரிமையாளரை தாக்கிவிட்டு சென்றுள்ளனர்.

சென்னை அயப்பாக்கம் பகுதியில் பிரியாணி கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதை கம்ரூல் என்ற நபர் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் அவரது கடைக்கு இரு இளைஞர்கள் பிரியாணி வாங்க வந்துள்ளனர். அவர்கள் இருவரும் பிரியாணி பார்சல் வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் நழுவி செல்ல முயன்று உள்ளனர். இதை கவனித்த கம்ரூல் அவர்களை நிறுத்தி பணம் கேட்டுள்ளார். அப்போது பணம் தர மறுத்து அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது திடீரென கம்ரூலின் செல்போனை உடைத்ததோடு மட்டுமில்லாமல் அவரை கடுமையாக தாக்கி விட்டு அந்த இளைஞர்கள் இருவரும் தாங்கள் வந்த வண்டியில் ஏறி தப்பி சென்றனர்.

இதையடுத்து காயம் அடைந்த கம்ரூல் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அருகிலுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து தப்பியோடிய இளைஞர்களை தேடி வருகின்றனர்.

Exit mobile version