Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 146 ஆக உயர்வு

திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 146 ஆக உயர்வு

 

தென்கொரியாவில் நடந்த ஹாலோவீன் திருவிழா கொண்டாட்டத்தின் போது அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசல் சிக்கி பலியானோர் எண்ணிக்கையானது 146 ஆக உயர்ந்துள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

தென் கொரியாவின் சியோலின் இதாவோன் பகுதியில் நடந்த ஹாலோவீன் திருவிழா கொண்டாடத்திற்காக சுமார் 1 லட்சம் பேர் கூடினர். இதனைத்தொடர்ந்து அங்கு மேலும் அதிக அளவிலான மக்கள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

 

கடந்த 2 வருடங்களாக பரவி வந்த கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, முதல் முறையாக முகக் கவசம் அணிவது கட்டாயம் என்ற கட்டுப்பாடு இல்லாமல் மக்களை வெளிப்புறத்தில் அனுமதிக்கப்பட்ட ஹாலோவீன் கூட்டம் இது என்பதால் அங்கு மக்கள் அதிக அளவில் கூடியிருந்தனர்.

 

இந்நிலையில் இந்த பண்டிகையின் போது ஒரு குறுகிய தெருவில் முன்னோக்கி தள்ளப்பட்ட ஒரு பெரிய கூட்டத்தால் நசுக்கப்பட்டதில் சிக்கிய மக்களில் சுமார் 120 பேர் உயிரிழந்துள்ளதாக தென் கொரிய நாட்டை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

 

இதனைத் தொடர்ந்து ஹாலோவீன் திருவிழா கொண்டாட்டத்தின் கூட்ட நெரிசல் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 146 ஆக உயர்ந்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகிள்ளன.

 

மேலும் இந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும், மாரடைப்புக்கு ஆளான சுமார் 50 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்,அவர்கள் அங்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version