மக்களே இதுகுறித்து இனி அச்சப்பட வேண்டாம்! இதோ அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

0
139
What are the curfew restrictions? Here is the important information of the Minister!

மக்களே இதுகுறித்து இனி அச்சப்பட வேண்டாம்! இதோ அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

முதலில் கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக மக்களை பெருமளவு பாதித்து வந்தது. முதலில் இத்தொற்றுக்கு எந்தவித தடுப்பு மருந்தும் கண்டுபிடிக்கவில்லை. அதனால் லட்சக்கணக்கான மனித உயிர்களை இழக்க நேரிட்டது. தொடரின் முதல் அலையில் அமெரிக்கா, பிரான்ஸ், பிரேசில் போன்ற நாடுகள் அதிக அளவு பாதிப்பை சந்தித்தது.நாளடைவில் கரோனா தொற்றானது இந்தியாவையும் பாதிக்க ஆரம்பித்தது. முதல் அலையில் அதிக அளவு உயிர்களை இழக்க விட்டாலும், இரண்டாம் அலை வரை எந்தவித தடுப்பு மருந்தும் கண்டு பிடிக்காததால் இந்தியாவில் பல உயிர்களை இழக்க நேரிட்டது.

நாளடைவில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தது. தற்பொழுது மக்கள் விழிப்புணர்வுடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு பிறகு ஒமைக்ரான் தொற்று பரவுவதாக கூறினர். இத்தொற்றானது இதுவரை இந்தியாவில் யாருக்கும் காணப்படவில்லை. சிங்கப்பூர் போன்ற இதர நாடுகளில் இத்தொற்று அதிக வேகத்தில் பரவிவருகிறது. இது கரோணா தொற்றை விட பல மடங்கு பாதிப்பைக் கொடுக்கும் என கூறியுள்ளனர். இந்த செய்தியானது நாளடைவில் இந்தியாவில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.அதுமட்டுமின்றி தடுப்பூசி செலுத்திபவர்களுக்கும் இத்தொற்று பாதிப்பு கண்டறியப்படுகிறது என கூறியுள்ளனர்.மேலும் முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களை அதிகளவு தாக்குவதாக கூறியுள்ளனர்.

சுகாதாரத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேட்டி ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியது, சோதனை மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு யாரிடமும் கண்டறியப்படவில்லை. அதனால்  இதுகுறித்து மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். அமட்டுமின்றி தற்பொழுது பதினோரு வெளிநாடுகளில் இருந்து வந்த தமிழக மக்கள் 477 பேருக்கும் ஒமைக்ரான் தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை செய்யப்பட்ட  தமிழகத்தை சேர்ந்த 477 பேருக்கும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு இல்லை என்று கூறினார்.