ரேஷன் கடையில் குவியும் மக்கள்! தமிழக அரசின் புதிய திட்டம்!

0
223
People flocking to the ration shop! Tamilnadu government's new plan!

ரேஷன் கடை :பொது மக்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் கணக்கு தொடங்கி, வங்கி சேவைகளை வழங்க மண்டல இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு பொது மக்களின் நலனுக்காக பல முயற்சிகளை செய்து வருகிறது. அதன் விளைவாக ரேசன் கடைகளில் பொதுமக்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் கணக்கு தொடங்கி வங்கி சேவைகளை வழங்க கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் மண்டல இணை பதிவாளருக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதற்கான நோக்கம் வங்கியால் வழங்கப்படும் சேவைகள் மற்றும் அரசு திட்டங்கள் மக்களை சென்றடைய வேண்டும் என எண்ணி இந்த செயல்பாடுகள் தொடங்கப்பட உள்ளன.

இந்த திட்டத்தின் சிறப்பம்சங்கள் :

ரேஷன் கடை வாயிலாக கூட்டுறவு வங்கிகளில் சேமிப்பு மற்றும் கடன் சேவைகளை மக்களுக்கு சென்றடையும் வகையில் அந்த பகுதியில் உள்ள  மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் சேமிப்பு கணக்கு தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கடை ஊழியர்களை கொண்டு கூட்டுறவு வங்கிகளின் சேமிப்பு திட்டங்கள், நிரந்தர வைப்பு திட்டங்கள், கடன் திட்டங்கள், குறித்த கையேடு விநியோகத்தையும் மக்களுக்கு வழங்க வேண்டும்.

சேமிப்பு கணக்கு தார்களுக்கு கூட்டுறவு வங்கி கடன் திட்டங்கள், அரசின் கடன் திட்டங்கள், நிரந்தர வைப்பு திட்டங்கள் குறித்த கையேடுகள் வங்கியின் மின்னணு பரிவர்த்தனை வசதி, ஏ.டி.எம்.கார்டு போன்ற அனைத்து வசதிகளை வழங்க வேண்டும்.

விவசாய உறுப்பினராக அதிக இளைஞர்களை ஈர்க்கும் வகையில் புதிய வங்கியில் திட்டங்களை ஆரபித்து கூட்டுறவு நிறுவனங்களின் உறுப்பினராக சேர்க்கவேண்டும் என்ற கொள்கையை கொண்டது.

அது மட்டும் அல்லாமல் ரேசன் கடைகளில் உணவு பொருள் வாங்கும்                  அட்டை தாரர்களுக்கு  பல நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது.