ஆதார் அட்டைக்கு பதில் மக்கள் ஐடி? அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!
முன்னதாக குடும்ப அட்டை இருந்தாலே போதும் அதுவே ஒருவருக்கு முக்கியமான ஆவணமாக இருந்தது.அதனை தொடர்ந்து ஒவ்வொருவருக்கும் தனி தனியாக அடையாள அட்டை வேண்டும் என மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கண் கருவிழி,கை ரேகை போன்றவைகளை பதிவு செய்து தனி நபரின் அடையாளம் போன்றவற்றையும் பதிவு செய்து தனித்துவமாக அனைவருக்கும் ஆதார் அட்டை வழங்கப்பட்டது.
அந்த ஆதார் அட்டையானது தற்போது மிக முக்கிய ஆவணமாக மாறியுள்ளது.குறிப்பாக மொபைல் சிம் வாங்குவதில் இருந்து வங்கி பரிவர்த்தனை,விமான பயணம்,கோவிலில் சாமி தரிசனம் போன்ற அனைத்திற்கும் ஆதார் அட்டை பயன்படுத்தப்படுகின்றது.
மேலும் தற்போது ரேஷன் கார்டு ,வங்கி கணக்கு,மின் இணைப்பு ,பான் கார்டு போன்ற அனைத்து ஆவணங்களுடனும் ஆதார் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டு வருகின்றது.இதன் மூலம் பல்வேறு வகையான பலன்களும் உள்ளது.ஒரு சேவையை பெறவேண்டும் என்றால் ஆதார் எண் இருந்தால் போதும் அந்த எண்ணின் மூலமாக நம்முடைய தனி நபர் விவரம் அனைத்தையும் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டது.
அந்தவகையில் தற்போது தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கங்கள் உள்ள மக்கள் ஐடி தமிழக அரசு வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்த மக்கள் ஐடி சமூக நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்று சேர்ப்பதற்கு இந்த மக்கள் ஐடி உதவும் என கூறப்படுகிறது. மாநில குடும்ப தரவு தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் செயல்படுத்துவதற்கான பணிகள் தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.