Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கருப்பு கொண்டை கடலையின் மகத்துவம் தெரிந்தால் அதை அவாய்ட் பண்ண மாட்டீங்க மக்களே!!

#image_title

கருப்பு கொண்டை கடலையின் மகத்துவம் தெரிந்தால் அதை அவாய்ட் பண்ண மாட்டீங்க மக்களே!!

உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தரும் பயறு வகைகளில் ஒன்று கொண்டைக்கடலை.இதில் கருப்பு கொண்டைக்கடலை மற்றும் வெள்ளைக்கொண்டை கடலை என்று இரண்டு வகைகள் இருக்கிறது.இந்த இரண்டு வகை கொண்டைக்கடலைகளும் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தருகின்றன.இந்த கொண்டைக்கடலையில் இரும்புசத்து,நார்ச்சத்து,புரதச்சத்து, வைட்டமிகள்,சுண்ணாம்பு சத்து,மெக்னீசியம்,போலிக் அமிலம்,செலினியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

கருப்பு கொண்டைக்கடலை உண்பதினால் உடலுக்கு கிடைக்கும் 8 நன்மைகள்:-

*எலும்புகளின் வளர்ச்சிக்கும்,நரம்புகளின் வளர்ச்சிக்கும் கொண்டைக்கடலை பெரிதும் உதவுகிறது.

*முளைகட்டிய கருப்பு கொண்டைக்கடலையை உண்டு வருவதன் மூலம் மாரடைப்பு ஏற்படுவதை தடுக்க முடியும்.அதுமட்டும் இன்றி உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு ஆற்றலை வழங்குவதில் இதற்கு முக்கிய பங்கு இருக்கிறது.

*சிறுநீரகம் தொடர்ப்பான பாதிப்பு இருப்பவர்கள் தினமும் கொண்டைக்கடலையை உணவாக எடுத்து வருவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

*கொண்டைக்கடலையில் உள்ள அதிகளவு நார்ச்சத்து செரிமானக் கோளாறு,குடல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்ய பெரிதும் உதவுகிறது.

*சர்க்கரை நோய் இருப்பவர்கள் கொண்டைக்கடலையை உணவாக எடுப்பதை வழக்கமாக்கி கொண்டால் இன்சுலின் அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.

*கொண்டைக்கடலையில் உள்ள பொட்டாசியம்,வைட்டமின் பி,செலினியம்,மெக்னீசியம் இதயம் தொடர்பான நோய்கள் வரமால் பாதுகாக்கிறது.

*குழந்தைகளுக்கு கொண்டைக்கடலையை உணவாக கொடுப்பதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.ஏனென்றால் நியாபக திறனை மேம்படுத்த செய்வதில் கொண்டைக்கடலைக்கு முக்கிய பங்கு இருக்கிறது.அதேபோல் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த கொண்டைக்கடலையில் இருக்கும் கோலைன் பெரிதும் உதவுகிறது.

*கல்லீரல் செயல்பாட்டை ஊக்குவிக்கவும்,புற்றுநோய் பாதிப்பு வரமால்தடுக்கவும் கொண்டைக் கடலையில் இருக்கும் செலினியம் பெரிதும் உதவுகிறது.

*அதேபோல் கொண்டைக்கடலையில் அதிகளவு போலிக் அமிலம் இருக்கிறது.இதனால் இவை கர்ப்பிணி பெண்களுக்கு சிறந்த உணவுப் பொருளாக இருக்கிறது.

*மலச்சிக்கல் பாதிப்பு,மூல நோய் பாதிப்பு இருபவர்கள் கொண்டைக்கடலையை உணவாக எடுத்து வருவதன் மூலம் விரைவில் உரிய தீர்வு கிடைக்கும்.

Exit mobile version