அச்சத்தில் மக்கள்!! கொரோனாவை தொடர்ந்து புதிதாக பரவும் மற்றொரு வைரஸ்!!

0
168
People in fear!! Another new virus spreading after Corona!!

தமிழகத்தில் ‘ஸ்க்ரப் டைபஸ்’ நோய் பரவல் அதிகரித்து வருவதாக பொதுசுகாதாரத்துறை அறிவித்துள்ளது. ரிக்கட்ஸியா என்ற பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட பூச்சிகளின் கடி மூலம் இந்த தொற்று ஏற்படுகிறது.

பாதிப்பு பகுதிகள்:
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பத்தூர், செங்கல்பட்டு மற்றும் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இந்த நோய் பரவல் அதிகம் காணப்படுகிறது. விவசாயிகள், வனப்பகுதியில் வசிப்போர், புதர்புறங்களில் வாழ்பவர்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

அறிகுறிகள்:
காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, தசை வலி மற்றும் தடிப்புகள் முக்கிய அறிகுறிகளாக உள்ளன.

முன்னெச்சரிக்கை மற்றும் சிகிச்சை:

1. பூச்சி கடியைக் தவிர்க்க முழு உடை அணியவும்.

2. பூச்சி விரட்டிகளைப் பயன்படுத்தவும்.

3. காய்ச்சல் ஏற்பட்டால் உடனே மருத்துவ ஆலோசனை பெறவும்.

சிகிச்சை:
மருத்துவர் பரிந்துரையுடன் ‘அசித்ரோமைசின்’ மற்றும் ‘டாக்ஸிசைக்கிளின்’ போன்ற மருந்துகள் வழங்கப்படுகின்றன
“மருத்துவர்கள் கூறுகிறார்கள், காய்ச்சலைக் கவனிக்காமல் விட்டால் நிமோனியா போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஒட்டுண்ணி மற்றும் ஒட்டுண்ணியால் பாதிக்கப்பட்ட வளர்ப்பு நாய்கள் மற்றும் பூனைகளில் மட்டுமே இது மனிதர்களை பாதிக்கின்றது. அவற்றிலிருந்து விலக்கி இருப்பதே நல்லது என்றும், இதனால் பாதிப்பைத் தவிர்க்கலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.”பொதுசுகாதாரத்துறை நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.”