மனிதர்களுக்கு காலை உணவு என்பது அவசியமான ஒன்றாக இருக்கிறது.காலை உணவை உட்கொண்டால் மட்டுமே அந்நாள் முழுவதும் ஆரோக்கியமாகவும்,சுறுசுறுப்பாகவும் செயல்பட முடியும்.
நாள் முழுவதும் புத்துணர்வுடன் இருக்க காலை உணவு ஊட்டச்சத்து நிறைந்தவையாக இருக்க வேண்டும்.ஆனால் இன்று பலர் காலை உணவு உட்கொள்வதையே மறந்துவிடுகின்றனர்.சிலர் வேலைப்பளு காரணமாக காலை உணவு உட்கொள்வதை தவிர்த்து வருகின்றனர்.
சிலர் உணவு உட்கொள்ள நேரமின்றி அவசர அவசரமாக உட்கொள்கின்றனர்.இதனால் செரிமானப் பிரச்சனை,மலச்சிக்கல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படக் கூடும்.
இதனால் ஆரோக்கியம் நிறைந்த காலை உணவை அனைவரும் உட்கொள்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.நார்ச்சத்து குறைவான மைதா,ஸ்மூத்தி,பழச்சாறு உள்ளிட்டவைகளை காலையில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.இதனால் உடல் மந்தம்,மலச்சிக்கல்,செரிமானப் பிரச்சனை ஏற்பட்டுவிடும்.
காலை உணவுடன் காபி,டீ அல்லது சூடான பானங்கள் அருந்துவதை தவிர்க்க வேண்டும்.காலை உணவு உட்கொண்ட பிறகு சூடான பானங்களை அருந்தினால் இரும்புச்சத்து குறைபாடு,ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும்.காலை உணவாக தானியங்கள் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
உணவுத் தானியங்களில் நார்ச்சத்து குறைவாக இருப்பதால் அதை காலையில் எடுத்துக் கொள்ளும் போது மலச்சிக்கல்,செரிமானப் பிரச்சனை உள்ளிட்டவைகள் ஏற்படும்.எனவே காலையில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் எடுத்துக் கொள்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.