Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சேலம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களே உஷார்:! இந்த ஐந்து மாவட்டங்களில் கொரோனா பரவல் உச்சத்தை அடையுமாம்!! அதிர்ச்சியூட்டும் தகவல்!

சேலம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களே உஷார்:! இந்த ஐந்து மாவட்டங்களில் கொரோனா பரவல் உச்சத்தை அடையுமாம்!! அதிர்ச்சியூட்டும் தகவல்!

தமிழகத்தில் கீழ்க்கண்ட ஐந்து மாவட்டங்களில் கொரோனா பரவல் உச்சத்தை அடையும் என்று தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் செப்டம்பர் மாத தொடக்கத்திலிருந்து,
ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள்,
அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் நோய் பரவும் அபாயம் அதிகம் உள்ளதால்,கடந்த வெள்ளிக்கிழமையன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், தலைமை செயலாளர் சண்முகம், கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட கூடாது என்றும், கூடுதல் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் சென்னையில் தான் அதிகம் கொரோனா தொற்று அதிகரிக்கும் என்று நாம் எண்ணியிருந்தோம்.
ஆனால் தலைமைச் செயலாளர் சண்முகம் கூறுகையில்,அடுத்த 15 நாட்களில் கடலூர்,நாகை, கோவை,திருவண்ணாமலை, சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் கொரோனா பரவல் உச்சத்தை அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும், இதை எதிர்கொள்ளும் வகையில் அந்தந்த மாவட்டங்களில் கூடுதல் மருத்துவ பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும் இந்த ஐந்து மாவட்ட மக்களும் சற்று கூடுதல் கவனத்துடன் தங்களை தாங்களே நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள,முக கவசம் அணிவது,தேவையின்றி வெளியில் செல்லாமல் இருப்பது,சமூக இடைவெளியை பின்பற்றுவது,போன்றவற்றை கடைபிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Exit mobile version