Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

போக்குவரத்து விதிமீறல்களை போட்டோ எடுங்க சென்னை மக்களே!

போக்குவரத்து விதிமீறல்களை போட்டோ எடுங்க சென்னை மக்களே

போக்குவரத்து விதிமீறல்களை போட்டோ எடுங்க சென்னை மக்களே

போக்குவரத்து விதிமீறல்களை போட்டோ எடுங்க சென்னை மக்களே! 

சென்னையில் எல்லா இடங்களிலும், எப்பொழுதும் போக்குவரத்து நெரிசல்கள் மிக மிக அதிகம். அதனால் போக்குவரத்து விதி மீறல்கள் சாதாரணமாக நடக்கிறது. தாங்கள் செய்வது போக்குவரத்து விதிமீறல்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்வதேயில்லை.

செல்போன் பேசிக்கொண்டே வண்டி ஓட்டுவது, ஹெல்மெட் போடாமல் செல்வது, சிக்னலை மதிக்காமல் செல்வது, கார்களில் சீட் பெல்ட் போடாமல் செல்வது, ஒன் வே ரோட்டில் செல்வது போன்ற தவறுகளை சாதாரணமாக செய்கிறார்கள்.

இப்படி சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை பொது மக்களாகிய நீங்கள் போட்டோ அல்லது வீடியோ எடுத்து ட்விட்டரில் போக்குவரத்து போலீசாரை டேக் செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

ஹெல்மெட் போடாதவர்கள், ஆபத்தாக வண்டி ஓட்டுபவர்கள், நம்பர் பிளேட் சரியாக இல்லாதவர்கள், சிக்னல் கோடு தாண்டி நின்றவர்கள், நோ பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தியவர்கள், மக்கள் நடந்து செல்லும் நடைபாதையில் வண்டியை நிறுத்தியவர்கள் என கடந்த ஒரு மாத காலத்தில் பலருக்கு அபராதம் போடப்பட்டு உள்ளது.

இவை எல்லாமே பொது மக்களின் மூலமாகவே, அதாவது அவர்கள் போட்டோ அல்லது வீடியோ எடுத்து அனுப்பியதால் நடந்துள்ளது.

எனவே பொதுமக்கள் தங்கள் பார்க்கும்  யாரேனும் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டால் அதை உடனே போட்டோ எடுத்து போக்குவரத்து போலீசாரை டேக் செய்தால் அது உண்மையா என அங்கிருக்கும் சிசிடிவி பார்த்து அதற்கான  அபராதத்தை உடனுக்குடன் கைபேசி எண்ணிற்கும்,வீட்டிற்கும் அனுப்பி வைக்கிறார்கள்.

ஆகவே சென்னை மக்களே விதிமீறல்களில் ஈடுபடாதீர்கள்.

 

Exit mobile version