சேலம் மக்களே உஷார்! மாவட்ட ஆட்சியரின் எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் தற்பொழுது தான் தொற்று பாதிப்பு குறைந்து காணப்படுகிறது.இந்நிலையில் பண்டிகைகள் வந்த வண்ணமாகவே உள்ளது.தற்பொழுது தான் அதன் தாக்கம் குறைந்து அதிலிருந்து மீண்டு வந்துள்ளோம்.தற்பொழுது கடந்து முடிந்த பண்டிகைகளான ஆயுத பூஜை போன்றவை தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி நடந்தது.அதனால் அதிகளவு தொற்று பாதிப்பு ஏற்படவில்லை.அதுமட்டுமின்றி மக்களும் தற்பொழுது விழிப்புணர்வுடன் தடுப்பூசி போட முன் வந்துள்ளனர்.வரும் மாதத்திலிருந்து அடுத்தடுத்தாக பல்வேறு பண்டிகைகள் வர உள்ளது.வரும் மாதம் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகை வர உள்ளது.
அதனையடுத்து கிறித்துமஸ் மற்றும் புத்தாண்டு போன்றவை தொடர்ந்து வர உள்ளது.அதனால் அரசாங்கம் கூறும் நடவடிக்கைகள் அனைத்தும் முறையாக கடைபிடிக்க வேடுமென்று அனைத்து மாவட்ட ஆட்சியரும் கூறி வருகின்றனர்.அந்தவகையில் மாவட்டத்திற்கு ஏற்ப அந்தந்த மாவட்ட ஆட்சியர் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகின்றனர்.அந்தவகையில் சென்னையில் மக்கள் வெளியே வரும் போது முகக்கவசம் அணியாமல் வந்தால் கட்டாயம் அபராதம் விதிக்கப்படும் என கூறியுள்ளனர்.அதேபோல தற்பொழுது சேலம் மாவட்ட ஆட்சியரும் கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.அவ்வாறு அவர் கூறியதாவது,சேலத்தில் உள்ள பட்டாசு கடைகள் அனைத்தும் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
அவற்றை கண்காணிக்க ஆர்டிஓ தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.அவ்வாறு சோதனையில் ஏதேனும் பட்டாசு கடை விதிகளை மீறி செயல்படுகிறது என்று கண்டறியப்பட்டால் கட்டாயம் உடனடியாக அந்த கடைக்கு சீல் வைக்கபப்டும் என்று கூறியுள்ளார்.மேலும் கொரோனா தொற்றின் பதிப்பு தற்பொழுது தான் குறைந்துள்ளது.தொற்று பதிப்பு அதிகரிக்கும் வகையில் மக்கள் செயல்படக் கூடாது என்று கூறியுள்ளனர்.அதுமட்டுமின்றி கொரோனா தொற்றை மனதில் வைத்து தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டும்.தொற்றை மறந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.