Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

புதன், செவ்வாய், சுக்கிரன் மாற்றத்தால் துன்பத்தை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள்!

#image_title

புதன், செவ்வாய், சுக்கிரன் மாற்றத்தால் துன்பத்தை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள்!

வரும் அக்டோபர் மாதம் புதன் பகவான் கன்னி ராசிக்கும், செவ்வாய் பகவான் துலாம் ராசிக்கும், சுக்கிரன் பகவான் சிம்ம ராசிக்கும் மாற்றம் அடைய உள்ளார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் பிரச்சினைகளை சந்திக்கப்போகிறார்கள் என்று பார்ப்போம் –

ரிஷபம்

புதன், சுக்கிரன், செவ்வாய் பகவான்களின் மாற்றத்தால் ரிஷப ராசிக்காரர்களே, உங்களுக்கு சில சிரமங்கள் ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது. நீங்கள் கடினமாக உழைத்தால்தான் வெற்றி பெறுவீர்கள். எதிர்பாராத பண வரவு கிடைக்கும். ஆனால், உங்களுக்கு அக்டோபர் மாதம் செலவுகள் கூடுதலாக இருக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும்.

கடகம்

புதன், சுக்கிரன், செவ்வாய் பகவான்களின் மாற்றத்தால் கடக ராசிக்காரர்களே, உங்களுக்கு அக்டோபர் மாதம் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். வேலை செய்யும் இடத்தில் சக ஊரியர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும். சரியாக திட்டமிட்டு செயல்பட வேண்டும். எதிரிகளின் தொல்லை ஏற்படும். உங்கள் உடல்நிலையில் கவனம் வேண்டும். வேலைகளை முடிக்க நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.

சிம்மம்

புதன், சுக்கிரன், செவ்வாய் பகவான்களின் மாற்றத்தால் சிம்ம ராசிக்காரர்களே, உங்களுக்கு அக்டோபர் மாதம் சிரமங்கள் ஏற்படும்.வேலைகள் கடுமையாக இருக்கும். சவால்களை சந்திக்க நேரிடும். பணத்தை திரும்ப பெற ரொம்ப சிரமப்படுவீர்கள். கடன் கொடுக்க வேண்டி இருக்கும். பயணங்கள் தள்ளி வைப்பது நல்லது. இல்லையென்றால் பணம் விரையமாகும். நிதிநிலையில் சிரமங்களை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

விருச்சிகம்

புதன், சுக்கிரன், செவ்வாய் பகவான்களின் மாற்றத்தால் விருச்சிக ராசிக்காரர்களே உங்களுக்கு கைக்கு மேல் நல்ல பலன் கிடைக்க உள்ளது. ராகுகேதுவின் அசுப பலன்கள் உங்களுக்கு உடல் நலக்குறைவை ஏற்படுத்தலாம். நிதிநிலை விஷயங்களில் சற்று சிரமம் ஏற்படும். தொழில் தொடர்பாக பிரச்சினை நேரும். அலுவலகங்களில் சக ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.

மீனம்

புதன், சுக்கிரன், செவ்வாய் பகவான்களின் மாற்றத்தால் மீன ராசிக்காரர்களே, உங்களுக்கு அக்டோபர் மாதம் சில கஷ்டங்கள் ஏற்படும். விரும்பத்தகாத செலவுகள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் உழைப்பு தாமதமாகும். தேவையில்லாத மன அழுத்தம் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

Exit mobile version