நாட்டில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் பல கட்டுப்பாடுகளை விதித்து அதனை கண்டுபிடிக்குமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறார்கள். ஆனால் இதனை பொதுமக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருப்பதால் நோய்த்தொற்று பரவல் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.சென்ற 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தியாவிற்குள் ஊடுருவிய நோய்த்தொற்று தற்போது வரையில் தொடர்ந்து வருகிறது. இந்த நோயினால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கானோர் தங்களுடைய உயிரை இழந்திருக்கிறார்கள். இதற்கிடையில் மக்களை பாதுகாப்பதற்கு மத்திய மாநில அரசுகள் மிகத் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
அதன் ஒருபகுதியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது அந்த ஊரடங்கு உத்தரவு ஆனது தற்போது வரையில் தளர்வுகளுடன் நீடித்து வருகிறது.இந்த சமயத்தில் நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்கு பொதுமக்கள் வீட்டிலேயே பண்டிகைகளை கொண்டாட வேண்டும் என்று நிதி ஆயோக் உறுப்பினர் வி கே பால் கூறியிருக்கின்றார்.
நாடு முழுவதும் நோய்த்தொற்று பரவல் இரண்டாவது அலை குறைந்து வருகின்ற சூழ்நிலையில், கேரள மாநிலத்தில் மட்டும் இதுவரையில் நோய்த்தொற்று பாதிப்பு அதிகரித்து மட்டும் தான் வருகிறது. நோய்தொற்று பரவலுக்கு ஏற்றவாறு அந்தந்த மாநில அரசுகள் தகுந்த கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. இந்த சூழ்நிலையில், இன்றைய தினம் நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி மிக விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை அதோடு தீபாவளி பண்டிகை உள்ளிட்ட பண்டிகை தினங்கள் அடுத்தடுத்து வர இருப்பதால் அடுத்தடுத்து வர இருக்கின்ற படுகைகளை மிகவும் கவனத்துடன் கட்டுப்பாடுகளுடன் கொண்டாட வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது.
இந்த சூழ்நிலையில், தற்போது நாட்டில் நோய்த்தொற்று நிலவரம் தொடர்பாக விளக்கம் தடுப்பதற்காக மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்றைய தினம் பத்திரிக்கையாளர்களை சந்தித்து இருகிறார்கள்.மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் உரையாற்றும்போது நாட்டில் நோய்த்தொற்று பரவல் இரண்டாவது அலை இதுவரையில் முடிவுக்கு கொண்டுவரப்படவில்லை. ஒரு நாளைய பாதிப்பு எண்ணிக்கை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. ஒட்டுமொத்த பாதிப்பில் கேரளா மாநிலத்தில் மட்டும் 68 சதவீதம் பாதிப்பு பதிவாகி உள்ளது என்று கூறியிருக்கிறார்.பண்டிகை காலங்களில் நோய்த்தொற்று வழிகாட்டு நெறிமுறைகளை பொது மக்கள் எல்லோரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும், தடுப்பூசி செலுத்தும் பணி சற்றே முன்னேற்றம் கண்டிருக்கிறது, சென்ற மே மாதத்தில் 20 லட்சம் பேருக்கு நோய் தொற்று தடுப்பூசி போடப்பட்டது இந்த எண்ணிக்கை செப்டம்பர் மாதத்தில் இரு 78 லட்சம் ஆக அதிகரித்திருக்கிறது என கூறியிருக்கின்றார்.
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய நிதி ஆயோக் உறுப்பினர் பி கே பால் இன்றைய தினம் நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகின்றது இந்த நோய்த்தொற்று இருக்கின்ற சூழ்நிலையில் பண்டிகைகளை வீட்டிலிருந்தபடியே கொண்டாட வேண்டும் இதனை அறிவுரையாக இல்லாமல் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளுங்கள், நோய்தொற்று பரவலுக்கு கொண்டாட்டங்கள் மற்றும் கூட்டங்கள் என்றால் மிகவும் பிடித்தவை இதன் காரணமாக, தீபாவளி வரையில் பண்டிகைகளை நோய்த்தொற்று வழிகாட்டு நெறிமுறைகள் உடன் கவனமாக கொண்டாட வேண்டும். இது குறித்து அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. நாட்டில் முப்பத்தி ஐந்து மாவட்டங்களில் நோய்த்தொற்று பரவல் சதவீதம் 10 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கிறது. நாடு முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்ட 50 சதவீதத்தை சார்ந்தவர்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டிருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.
இதனை அடுத்து உரையாற்றிய ஐ சி எம் தலைவர் பல்ராம் பார்க்கவா உரையாற்றும்போது நோய்த்தொற்று தடுப்பூசியின் ஒரு டோஸ் இழப்பைத் தடுப்பதில் தொண்ணூற்று 6.6 சதவீதம் பயன் அளிப்பதாகவும் இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசி 97.5 சதவீதம் பயனுள்ளதாக இருக்கும் என கூறியிருக்கின்றார்.சென்ற ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி ஆரம்பித்து ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி வரையிலான புள்ளி விவரங்களை பார்த்தோமானால் தடுப்பூசிகள் உயிரிழப்பு ஏற்படுவதை தடுத்து நிறுத்துகிறது நோய் தொற்று பரவல் இரண்டாவது அலையில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தடுப்பு ஊசி போட்டுக் கொள்ளாதவர்கள் என்று தெரிவித்திருக்கிறார்.