திருச்சூர் குன்னம்குளத்தில் பைக்கில் சென்ற பாஜக பிரமுகரை கத்தியால் குத்திய நபர்கள்: தலை மற்றும் கழுத்தில் காயம்.
கேரளா மாநிலம் திருச்சூரிலுள்ள குன்னம்குளம் மேற்கு மாங்காடு பகுதியை சேர்ந்தவர் பாஜக பிரமுகர் கவுதம் சுதி (29) இவர் நேற்றிரவு மேற்கு மாங்காடு கோவில் அருகே பைக்கில் சென்ற போது திடீரென வழி மறித்த கும்பல் அவரின் தலை மற்றும் கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளனர்.
இவரின் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் கவுதம் சுதியை மீட்டு குன்னம்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த தாக்குதலின் பின்னணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இருப்பதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.