Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நாமக்கல் அருகே குளத்தில் செத்து மிதக்கும் மீன்களால் பொதுமக்கள் அவதி!!

#image_title

நாமக்கல் அருகே குளத்தில் செத்து மிதக்கும் மீன்களால் பொதுமக்கள் அவதி!!

நாமக்கல் கொண்டிசெட்டிப்பட்டி பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான குளத்தில் கழிவுநீர் கலப்பதால் அதிகப்படியான மீன்கள் செத்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.

நாமக்கல் நகர் பகுதியில் உள்ள கொண்டிசெட்டிப்பட்டியில் நகராட்சி சொந்தமான 17.5 ஏக்கர் பரப்பளவில் குளம் ஒன்று உள்ளது. இந்த குளம் 2015 – 2020 ஆண்டுகளில் புணரமைக்கப்பட்டு குளத்தை சுற்றியும் பாதை அமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்தது. இந்த குளத்தில் கெண்டை, கெளுத்தி, கட்லா உள்ளிட்ட மீன் வகைகளும் வாத்துகள் ஆகியவை நகராட்சி சார்பில் குளத்தில் விடப்பட்டது.

இந்நிலையில் கொண்டிசெட்டிப்பட்டி, பெரியப்பட்டி, கே கே நகர், முல்லை நகர், சிங்கிலிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் கழிவுநீர் இந்த குளத்தில் கலப்பதால் குளத்தில் உள்ள மீன்கள் செத்து மிதக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மீன்கள் செத்து கடும் துர்நாற்றம் வீசுவதால் குளத்தில் அருகே வசிக்கும் குடியிருப்பு வாசிகளும் நடைபயிற்சி மேற்கொள்ளும் நபர்களும் கடும் அவதி அடைந்துள்ளனர்.

மேலும் கழிவு நீர் குளத்தில் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version