மக்களே நோட் பண்ணிக்கோங்க.. இந்த 9 நாட்கள் வங்கிகள் இயங்காது!!

0
215
People take notes.. Banks will not work for these 9 days!!
மக்களே நோட் பண்ணிக்கோங்க.. இந்த 9 நாட்கள் வங்கிகள் இயங்காது!!
அடுத்த மாதம் அதாவது ஆகஸ்ட் மாதம் வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை வரவுள்ளது. இதனால் வங்கி ஊழியர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் வங்கி வாடிக்கையாளர்கள் சோகமடைந்துள்ளனர்.
இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளும் சரி தனியார் துறை வங்கிகளும் சரி அனைத்து வங்கிகளும் இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றது. இந்திய ரிசர்வ் வங்கிதான் வங்கிகளுக்கு தேவையான அனைத்து கட்டுப்பாடுகளையும் வழங்கி வருகின்றது.
அந்த வகையில் இந்திய ரிசர்வ் வங்கிதான் வங்கிகளுக்கு விடுமுறை குறித்தான அறிவிப்புகளையும் வெளியிடுகின்றது. வங்கிகளுக்கு எந்தெந்த நாட்களில் விடுமுறை என்பதை இந்திய ரிசர்வ் வங்கி ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும் அறிவித்து விடும்.
அது ஏன் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்தில் இந்திய ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு விடுமுறை நாட்களை முன்கூட்டியே அறிவிக்கின்றது என்றால் அது வாடிக்கையாளர்களின் வசதிக்காகத்தான். ஏன் என்றால் வங்கியின் வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களுடைய வங்கி பணிகளுக்காக அதாவது பணத்தை எடுப்பது, டெபாசிட் செய்வது போன்ற பணிளுக்காக வங்கிகளுக்கு செல்கின்றனர்.
ஆனால் வங்கிகளின் விடுமுறை தினம் எது வேலை நாள் எது என்பதை கூட அறியாமல் மக்கள் அனைவரும் வங்கிக்கு சென்று திரும்பும் சூழல் ஏற்படுகின்றது. இதனால் இந்திய ரிசர்வ் வங்கியானது பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளுக்கான விடுமுறை தினங்களை முன்கூட்டியே அறிவிக்கின்றது.
வங்கிகள் பொதுவாக பண்டிகை கால விடுமுறை, பொது விடுமுறை, வாரத்தின் இறுதி நாட்களில் விடுமுறை ஆகிய மூன்று வகைகளில் குறிப்பிட்ட தினங்களில் இயங்காது. அந்த வகையில் தற்பொழுது ஆகஸ்ட் மாதம் வங்கிகளுக்கு 9 நாட்களுக்கு விடுமுறை என்று அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.
அந்த வகையில் ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி(ஞாயிற்றுக் கிழமை) ஆகஸ்ட் 10ம் தேதி(இரண்டாவது சனிக்கிழமை), ஆகஸ்ட் 11ம் தேதி(ஞாயிற்றுக் கிழமை), ஆகஸ்ட் 15ம் தேதி(ஞாயிற்றுக் கிழமை), ஆகஸ்ட் 24(நான்காவது சனிக்கிழமை), ஆகஸ்ட் 25(ஞாயிற்றுகிழமை) ஆகிய 6 நாட்கள் வார இறுதி விடுமுறை நாட்களாகும்.
ஆகஸ்ட் 15(வியாழக்கிழமை) சுதந்திர தினத்திற்காகவும், ஆகஸ்ட் 19(திங்கட்கிழமை) ரிக்ஷா பந்தன் நாளுக்கும், ஆகஸ்ட் 26(திங்கட்கிழமை) ஜென்மாஷ்டமி தினம் ஆகிய மூன்று தினங்கள் பண்டிகை கால விடுமுறை என்றும் அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.