தென் இந்தியர்களின் உணவு பட்டியலில் அரிசி நீங்கா இடத்தை பிடித்திருக்கிறது.தற்போதைய நாவீன காலத்தில் அரிசியை சாதமாக்க குக்கர்,மைக்ரோவேவ் போன்ற சமையல் பாத்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.இந்த பாத்திரங்களில் சமைப்பதால் கேஸ் மற்றும் நேரம் சேமிக்கப்படுகிறது.
ஆனால் அரிசியை ஊற வைக்காமல் சமைத்து சாப்பிட்டால் அது உடல் ஆரோக்கியத்திற்கு பாதகமாகிவிடும்.நமது அம்மாக்களும் பாட்டிகளும் அரிசியை ஊறவைத்து சமைக்கும் பழக்கத்தை கடைபிடித்து வந்தனர்.ஆனால் இன்றைய இளம் தலைமுறையினர் நேர்த்தையும்,பணத்தையும் மிச்சப்படுத்துவதற்கான குக்கர்,மைக்ரோவேவ் போன்ற பாத்திரங்களில் சமைக்கின்றனர்.
அரிசியை ஊறவைத்து சமைப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்:
தண்ணீரில் அரிசியை ஊறவைத்து சமைப்பதால் அதில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் முழுமையாக கிடைக்கிறது.
ஊறவைத்த அரிசியை சமைத்து சாப்பிடுவதால் செரிமான அமைப்பு மேம்படும்.அரிசியை ஊறவைத்து சமைத்து சாப்பிடுவதால் இரத்த சர்க்கரை அளவு எகிறாமல் கட்டுக்குள் இருக்கும்.
அரிசியில் அதிகப்படியான மாவுச்சத்து நிறைந்திருக்கிறது.அரிசியை ஊறவைக்காமல் சமைத்து சாப்பிட்டால் உடல் எடை கூடிவிடும்.எனவே அரசியை ஊறவைத்து சமைப்பதால் அதன் மாவுச்சத்து தன்மையை குறைக்க முடியும். அதற்காக மணி கணக்கில் அரிசியை ஊற வைக்க கூடாது.அதிக நேரம் அரிசியை ஊறவைத்தால் அதில் இருக்கின்ற வைட்டமின்கள்,ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் நீங்கிவிடும்.எனவே 15 முதல் 20 நிமிடங்கள் வரை மட்டும் அரிசியை ஊறவைத்து பயன்படுத்துங்கள்.