பச்சை முட்டை குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள்.. அதன் ஆபத்தை கட்டாயம் உணர வேண்டும்!!

0
93
pachai muttai problems in tamil

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் புரதசத்து நிறைந்த முட்டைக்கு தனி இடம் உண்டு.வேக வைத்த முட்டையை சாப்பிட்டு வந்தால் புரதம்,பொட்டாசியம்,மெக்னீசியம்,நியாசின்,சோடியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.வேக வைத்த முட்டையில் 10 சதவீதம் புரதம் மற்றும் மீதம் 90 சதவீதம் நீர் இருக்கிறது.

முட்டையின் மஞ்சள் கருவில் இரும்பு,துத்தநாகம்,பாஸ்பரஸ் மற்றும் பல வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகிறது.இதய நோய்,இரத்த அழுத்தம்,சர்க்கரை உள்ளவர்கள் வேக வைத்த முட்டையை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

சிலருக்கு பச்சை முட்டை குடிக்கும் பழக்கம் இருக்கும்.உடற் பயிற்சி செய்பவர்கள் பச்சை முட்டை குடிப்பார்கள்.இது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று சிலர் கூறி கேட்டிருப்பீர்கள்.ஆனால் உண்மையில் பச்சை முட்டை குடிப்பதால் பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும்.

பச்சை முட்டை குடிப்பது ஆரோக்கியத்திற்கு ஆபத்தான செயலாகும்.முட்டையின் வெள்ளைக்கரு சிலருக்கு ஒவ்வாமை பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.பச்சை முட்டை குடிப்பதால் சரும பாதிப்பு,வயிற்றுப் போக்கு,அரிப்பு,வீக்கம் போன்ற பக்க விளைவுகள் ஏற்படும்.

முட்டையின் வெள்ளைக்கருவில் உள்ள அல்புமினை தோல் சார்ந்த பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.முட்டையின் வெள்ளைக்கருவில் அதிகளவு புரதம் நிறைந்து காணப்படுவதால் சிறுநீரகம் சார்ந்த பிரச்சனை இருப்பவர்களுக்கு பாதிப்பை உணடாகிவிடும்.

வேக வைக்காத முட்டையை உட்கொள்வதால் கடுமையான உடல் நல தொந்தரவுகள் ஏற்படும்.பச்சை முட்டை குடிப்பதால் வயிறு வலி,வயிற்றுப்போக்கு,செரிமானப் பிரச்சனை,வாயுக் கோளாறு போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.எனவே பச்சை குடிப்பதை அனைவரும் தவிர்க்க வேண்டும்.