மாற்றுத்திறனாளிகளே மிஸ் பண்ணிடாதீங்க!! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு!!
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி அவர்கள் மக்களுக்கு பயன் தரும் வகையில் புதிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி கூறியதாவது,உடல் குறைபாடுகளான மாற்று திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலிகள், ஊன்றுகோல், போலியோவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு காலிப்பர்கள், விபத்தினாலோ வழங்கப்படுகிறது.
மேலும் நோயாலோ கை கால்களை இழந்த பாதிக்கப்பட்ட மாற்று திறனாளிகளுக்கு செயற்கை அவயங்களும், 18 முதல் 60 வயது வரை உள்ள தையல் பயிற்சி முடித்து தையல் சான்று பெற்றுள்ள மாற்று திறனாளிகள், பார்வை குறைபாடு உள்ளோர் மற்றும் காது கேளாத மாற்று திறனாளிகளுக்கு தையல் எந்திரம், இளங்கலை அல்லது முதுகலை பட்டபடிப்பு மற்றும் டெட், டி.பி,என்.சி போன்ற போட்டி தேர்வுக்களுக்கு பயிலும் பார்வை குறைபாடு உள்ளோர்களுக்கு பிரெய்லி எழுத்துகளை மின்னணு முறையில் வாசிக்கும் கருவி, மற்றும் பார்வைத்திறன் மற்றும் செவித்திறன் குறைபாடு உள்ளோர்களுக்கு திறன்பேசி சாதனங்கள் போன்ற உதவி உபகரணங்கள் மாற்றுதிறனாளிகள் நலத்துறையால் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
மாற்றுதிறனாளிகள் நல அலுவலகத்தில் உபகரணங்கள் பெற விரும்பும் மாற்று திறனாளிகள் தங்களது மாற்று திறனாளிகளுக்கான அடையாள அட்டை (அனைத்து பக்கங்களும் மருத்துவர் சான்று உட்பட ),ஆதார் அட்டை ஆகிவற்றின் நகல்களும், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2 ஆகியவற்றுடன் காஞ்சிபுர மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரில் வந்து விண்ணப்பித்து பயனடைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.