உங்களில் பலருக்கு கண் தொடர்பான பாதிப்புகள் இருக்கும்.சிலருக்கு பிறந்ததில் இருந்தே கண் பார்வை குறைபாடு பிரச்சனை இருக்கும்.இதனால் வாழ்நாள் முழுவதும் கண் கண்ணாடி அணியும் நிலைக்கு தள்ளப்படுவர்.
சிலருக்கு மங்கலான கண் பார்வை பிரச்சனை,கண்களில் இருந்து நீர் வடிதல்,கண் வலி,தலைவலி போன்ற பாதிப்புகள் இருக்கும்.கண் பார்வை தொடர்பான பாதிப்புகளை ஆரம்ப நிலையிலேயே மருத்துவரை அணுகி குணப்படுத்திக் கொள்வது நல்லது.
மேலும் கண்பார்வை குறைபாட்டை சரி செய்ய ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
1)கேரட்
இதில் வைட்டமின் ஏ சத்து அதிகம் நிறைந்திருக்கிறது.அதேபோல் பீட்டா கரோட்டின் உள்ளிட்டவை அதிகம் நிறைந்திருக்கிறது.இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தொடர்பான பாதிப்புகள் அனைத்தும் சரியாகும்.
2)எலுமிச்சம் பழம்
சிட்ரஸ் அதிகம் நிறைந்த பழங்களில் ஒன்று எலுமிச்சை.இதில் வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்திருக்கிறது.இந்த சிட்ரஸ் பழத்தின் சாறை அருந்தினால் கண் பார்வை சரியாகும்.
3)தக்காளி
இதில் வைட்டமின் ஏ,சி உள்ளிட்ட சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கிறது.இதை சாப்பிடுவதால் கண் ஆரோக்கியம் மேம்படும்.பார்வை குறைபாடு பிரச்சனை சரியாகும்.
4)ப்ரோகோலி
கண் தொடர்பான பாதிப்புகள் குணமாக ப்ரோக்கலியை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
5)பச்சை கீரை
கண் புரை,கண் கோளாறு பிரச்சனைகள் சரியாக பச்சை கீரைகளை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.
6)ஆரஞ்சு
இதில் நிறைந்துள்ள வைட்டமின் சி சத்துக்கள் கண் பார்வை குறைபாட்டை சரி செய்ய உதவுகிறது.
7)குடைமிளகாய்
இதில் வைட்டமின் சி,பீட்டா கரோட்டின் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது.இதை உணவில் சேர்த்துக் கொண்டால் கண் தொடர்பான பாதிப்புகள் குணமாகும்.