Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாஜக மீது மக்கள் காட்டும் நம்பிக்கை எங்களை வியப்பில் ஆழ்த்துகிறது – பிரதமர் மோடி பேச்சு!!

#image_title

பாஜக மீது மக்கள் காட்டும் நம்பிக்கை எங்களை வியப்பில் ஆழ்த்துகிறது – பிரதமர் மோடி பேச்சு!!

மத்திய பிரதேசத்தில் வருகின்ற 17 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அம்மாநிலத்தை ஆளும் பாஜக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

இந்த ஆண்டு ஒரே கட்டமாக 230 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் பாஜகவிடம் ஆட்சியை பறிகொடுத்தது.

இந்நிலையில் வரவுள்ள சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிக்க காங்கிரஸும், ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள ஆளும் பாஜக அரசும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

ஏற்கனவே பாஜக மற்றும் காங்கிரஸின் மூத்த தலைவர்கள் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் நிலையில் பிரதமர் மோடி அவர்கள் ஷாஜாபூரில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

பேரணியில் பிரதமர் மோடி கூறியதாவது, தேர்தல் பிரச்சாரத்தின் போது நான் பலதரப்பு மக்களை சந்தித்து பேசினேன். அவர்கள் பாஜக மீது வைத்திருக்கும் நம்பிக்கை மற்றும் அன்பை கண்டு வியப்படைந்தேன்.

மக்கள் பாஜகவிற்கு கொண்டுக்கும் அமோக ஆதரவால் மத்திய பிரதேசத்தில் வீசிக் கொண்டிருக்கும் பாஜக புயல், காங்கிரஸை வேரோடு பிடுங்கி எறியும். மக்களின் அமோக ஆதரவால் இந்த முறையும் பாஜக ஆட்சி அமையும் என்று நம்பிக்கை தெரிவித்த பிரதமர் மோடி அவர்கள் காங்கிரஸால் அதல பாதாளத்தில் இருந்த மத்திய பிரதேசத்தின் வளர்ச்சியை பல இன்னல்களுக்கு பின்னர் பாஜக மீட்டு கொண்டு வந்திருக்கிறது என்று பேரணியில் தெரிவித்தார்.

Exit mobile version