Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

‘மக்கள் நீதி மய்யம்’ ஆலோசனை கூட்டம் – கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்றது!

மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள், செயலாளர்கள், பொறுப்பாளர்கள் என அனைவருடனும் ஆலோசனை நடத்துகிறார் கமல்ஹாசன் தேர்தல் வேலைகள் குறித்தும், அந்தந்த தொகுதி வேட்பாளர்கள் குறித்தும், மக்களின் நன்மைகள் என பலவற்றைப் பற்றி ஆலோசனை நடத்துகிறார்.

இன்று துவங்கிய இந்த ஆலோசனை கூட்டமானது தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறுமாம். அதுமட்டுமன்றி இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட மற்றும் மண்டல செயலாளர்கள், அந்தந்த தொகுதியின் பொறுப்பாளர்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் என சுமாராக 800 நபர்கள் வரை இக்கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

இந்த ஆலோசனை கூட்டம் ஆனது கமல்ஹாசன் தலைமையில் சென்னை மாநகரத்தில் நடைபெற்று வருகிறது. மேலும் தேர்தல் வியூகம், கொள்கை, பிரச்சாரம் போன்ற பல தேர்தல் சம்பந்தப்பட்ட விஷயங்களை ஆலோசித்து வருகிறார்கள்.

வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கான முக்கிய பணிகள் குறித்தும் தொகுதிவாரியான பிரச்சினைகள் குறித்தும் உறுப்பினர் சேர்ப்பு என பலவற்றை பற்றியும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version