Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மக்களின் நலம்தான் எங்களுக்கு முன்னுரிமை! டிகே சிவக்குமார் டுவிட்டரில் பதிவு!!

#image_title

மக்களின் நலம்தான் எங்களுக்கு முன்னுரிமை! டிகே சிவக்குமார் டுவிட்டரில் பதிவு!
கர்நாடக மக்களின் நலம் தான் எங்களுக்கு முன்னுரிமை அதனால் நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம் என்று கர்நாடக மாநில துணைமுதல்வராக தேர்நெடுக்கப்பட்டுள்ள டி.கே சிவக்குமார் அவர்கள் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான பலத்துடன் வெற்றி பெற்றது. இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் பதிவிக்கு சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் இருவர்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. மாநில முதல்வர் யார் என்பதை தேர்ந்தெடுக்க கட்சியில் சில நாட்களாக ஆலோசனை கூட்டம் நடந்து வந்தது. இதையடுத்து சுமூக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக முதல்வர் பதவிக்கு சித்தராமையா அவர்களும் துணை முதல்வர் பதவிக்கு டி கே சிவக்குமார் அவர்களையும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வரும் சனிக்கிழமை அதாவது மே 20ம் தேதி பிற்பகல் 12.30 மணிக்கு பெங்களூருவில் பதவியேற்பு விழா நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் கர்நாடக மாநில துணை முதலமைச்சர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டதை குறித்து டி கே சிவக்குமார் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் “கர்நாடக மாநிலத்தின் பாதுகாப்பான எதிர்காலம் மற்றும் மக்கள் நலனே எங்களுக்கு முன்னுரிமை. அதற்கு உத்திரவாதம் அளிப்பதில் நாங்கள் ஒன்று பட்டுள்ளோம்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
Exit mobile version