ரஷ்யாவிற்கு அதிர்ச்சி கொடுத்த பெப்சி கோக் நிறுவனங்கள்!

0
141

ரஷ்யா தன்னுடைய அண்டை நாடான உக்ரைன் மீது கடந்த 24ஆம் தேதி திடீரென்று போர் தொடுத்தது ஆனாலும் இதற்கு முன்பாகவே உக்ரைன் நாட்டை எல்லைகளில் தன்னுடைய ராணுவ நிலைகளை நிறுத்தி வைத்திருந்தது ரஷ்யா.

இதற்கு அமெரிக்கா கடுமையான கண்டனங்களை பதிவு செய்ததுடன் மேலும், எப்போது வேண்டுமானாலும் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கலாம் ஆகவே உக்ரைனிலிருக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுங்கள் என்று தெரிவித்தது.

அமெரிக்கா யூகித்தது போலவே கடந்த 24-ஆம் தேதி திடீர் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் மீது தாக்குதல் தொடுக்க தன்னுடைய ராணுவ படைகளுக்கு உத்தரவிட்டார்.

அதன்படி 2 வாரங்களுக்கு மேலாக இந்த போர் நீடித்து வருகிறது இதில் ரஷ்யா கடுமையான தாக்குதல்களை உக்ரைன் மீது தொடுத்து வருகிறது. ஆகவே உக்ரைன் மிக கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

இந்த போரில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் உட்பட பலர் பலியாகி இருக்கிறார்கள். ரஷ்ய ராணுவ படைகள் முக்கிய நகரங்களில் ஏவுகணை மூலமாக வான்தாக்குதல், பீரங்கி தாக்குதல், உள்ளிட்டவற்றை நடத்தி வருகின்றன.உக்ரைன் அரசாங்கமும் ரஷ்யாவிற்கு ஈடுகொடுத்து போர் புரிந்து வருகிறது.

இந்த நிலையில், உக்ரைன் மீதான தாக்குதலை கண்டிக்கும் விதத்தில் ஆப்பிள், லிவிஸ், நெட்பிளிக்ஸ், உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தங்களுடைய சேவையை ரஷ்யாவில் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில், உக்ரைனுக்கு எதிரான போரின் எதிரொலியாக ரஷ்யாவில் தங்களுடைய செயல்பாடுகளை நிறுத்துவதாக கோகோ கோலா மற்றும் பெப்சி உள்ளிட்ட குளிர்பான நிறுவனங்களும் அறிவித்திருக்கின்றன.