Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கொளத்தூரில் நடந்து சென்ற பெண்ணிடமிருந்து 6 சவரன் தாலி செயின் பறிப்பு

Chain Snatching

Chain Snatching

கொளத்தூரில் நடந்து சென்ற பெண்ணிடமிருந்து 6 சவரன் தாலி செயின் பறிப்பு

சென்னை கொளத்தூர் யுனைடெட் காலனி பகுதியை சேர்ந்தவர் குமார் (50). இவரது மனைவி நாகராணி (44). குமார் எலக்ட்ரிகல் வேலை செய்து வருகிறார்.நாகராணி இல்லத்தரசியாக இருந்து வருகிறார்.

நேற்று மாலை 6 மணி அளவில் நாகராணி கோவிலுக்கு செல்வதற்காக கொளத்தூர் திருப்பதி நகர் நான்காவது மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் நாகராணி அணிந்திருந்த ஆறு சவரன் தாலி செயினை பறிக்க முற்பட்டனர்.

அப்பொது நாகராணி அவர்களிடமிருந்து தப்பிக்க முயற்சி செய்தார். இதனால் அவர் கீழே விழுந்து காயம் ஏற்பட்டது. அதற்குள் அந்த மர்ம நபர்கள் தாலி செயினை பறித்துக் கொண்டு சென்று விட்டனர்.

கீழே விழுந்ததில் நாகராணிக்கு முகத்தில் காயம் ஏற்பட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்த தகவல் அறிந்த கொளத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நாகராணியிடமும் விசாரணை செய்து சம்பவத்தில் ஈடுபட்ட அந்த இரண்டு நபர்களையும் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து கொளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version