20 Years of Perazhagan: நடிகர் சங்கர் சரி இயக்கத்தில், ஏ.வி.எம் தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில், நடிகர் சூர்யாவின் வித்தியாசமான நடிப்பில் கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் பேரழகன் திரைப்படம். இந்த படத்தில் நடிகர் சூர்யா இருவேட மாறுபட்ட நடிப்பில் நடித்தார். இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்த படத்தில் நடிகர் சூர்யா, ஜோதிகா, நடிகர் விவேக், மனோரமா, மனோபாலா ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்தப்படத்தில் நடித்ததற்காக சூர்யாவுக்கு நடிகர் ஃபிலிம் பேர் விருது வழங்கப்பட்டது. நடிகை ஜோதிகாவிற்கு தமிழக அரசின் மாநில விருதினை பெற்றார். ஆனால் இந்தப்படத்திற்காக நடிகர் சூர்யாவிற்கு தேசிய விருது வழங்கப்படவில்லை. இந்த படம் மலையாளத்தில் வெளியான குஞ்சிக்கோனன் படத்தின் ரீமேக் என்பதால், நடிகர் சூர்யாவிற்கு தேசிய விருது கொடுக்கவில்லை.
இந்தப்படத்தில் நடிகர் சூர்யா, கார்த்தி மற்றும் சின்னா என இருவேட தோற்றத்தில் நடித்தார். இதில் கார்த்தி கல்லூரி மாணவராக நடித்தார். கார்த்தி தனது கிளாஸ் மேட் பிரியாவை காதலிக்க, பிரியாவும் கார்த்திக்கை காதலிக்கிறார். முதுகில் கூன் விழுந்த மாற்றுத்திளனாளியான சின்னா டெலி ஃபோன் பூத் வைத்துள்ளார். இவரை மற்றவர்கள் கிண்டல் செய்யக்கூடாது என்பதற்காக இவர் எப்போதும் தன்னம்பிக்கையாக இருப்பார்.
கார்த்தி மற்றும் பிரியா இருவரும் காதலிக்க, இதனை பிரியாவின் தந்தை மறுக்க பிரியா வீட்டை விட்டு வெளியேறிவிடுகிறார். இதற்கிடையில் பிரியாவின் தந்தையினால் தாக்கப்பட்ட ரவுடி பிரியாவை கொன்றுவிடுகிறார். இந்த கொலையை சின்னா பார்த்துவிடுகிறார். இதனை கண்ட ரவுடி சின்னாவை மிரட்டுகிறார். இதனால் போலீஸால் கார்த்தி கைது செய்யப்படுகிறார். நடந்த அனைத்தையும் சின்னா கூறுகிறார். இதற்கு இடையில் சின்னா செண்பகத்தை காதலிக்கிறார். தனது காதலி பிரியாவின் சாயலில் இருக்கும் செண்பகததை கார்த்தி காண்கிறான். தனக்கு தான் அவள் சொந்தம் என்று நினைக்கிறேன்.
இதனிடையில் பிரியாவின் கண்கள செண்பகத்திற்கு பொருத்தப்பட்டைதை அறிந்த கார்த்தி, செண்பகத்தை காண செல்கிறான். அங்கு செண்பகம் சின்னா என்று நினைத்து கார்த்தியை பார்க்கிறாள். சின்னா தான் மாற்றுதிறனாளியாக இருப்பதை செண்பகம் விரும்ப மாட்டாள் என தெரிந்து செல்கிறான்.
நடிகர் விவேக் சின்னாவை அழைத்து வந்து நடந்த உண்மையை செண்பகத்திடம் கூறுகிறான். செண்பகம் சின்னாவை ஏற்றுக்கொள்கிறாள். அதன் பிறகு ரவுடியால் சின்னா தாக்கப்படுகிறான். இதற்கிடையில் தனது காதலி பிரியாவின் கொலைக்கு காரணமான ரவுடியை கொலை செய்கிறான் கார்த்தி. பிறகு சின்னா மற்றும் செண்பகத்தின் காதலுக்கு சிரித்த முகத்துடன் சம்மதம் தெரிவிக்கிறான் கார்த்தி.
இந்த படம் வெளியாகி 20 வருடங்கள் ஆகியும் இன்றும் மக்கள் மனதில் நீங்காத இடத்தை இது பிடித்துள்ளது. இந்த படத்தில் வரும் அம்புலி மாமா பாடல் வெளியாகி அனைவரின் மத்தியிலும் வரவேற்பை பெற்றது. இன்றும் இந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.