தமிழ்நாட்டில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து விதமான அரசியல் கட்சிகளும் இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த விதத்தில் அதிமுக மற்றும் திமுக என்ற இரு பெரும் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறார்கள்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் தேதி அறிவிப்பதற்கு இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே தமிழகம் முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த விதத்தில் அவர் தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து மாவட்டங்களிலும் நேரடியாக சென்று மாவட்டத்தின் வளர்ச்சி பணிகள் மற்றும் தடுப்பு பணிகள் போன்றவற்றை பார்வையிட்டு அந்தந்த மாவட்டத்தில் இருக்கக்கூடிய குறை நிறைகளை தெரிந்து கொண்டு அதற்கேற்றவாறு செயல்பட்டு வந்தார்.
அவர் இவ்வாறு தமிழகம் முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட காரணத்தால், தமிழக மக்களிடையே அவர் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வந்திருக்கிறார். அதோடு அவருக்கான ஆதரவு தமிழகம் முழுவதிலும் பெருகிவருகிறது.அதோடு மட்டுமல்லாமல் தற்போது வெளியிட்டிருக்கும் 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையிலும் அவர் வெளியிட்டிருக்கும் ஒவ்வொரு அறிவிப்பும் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று இருக்கிறது. அதிலும் குறிப்பாக வீட்டிற்கு ஒருவருக்கு அரசு வேலை கட்டாயம் மற்றும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ஆயிரத்து 500 ரூபாய் நிதி உதவி, அதேபோல ஊனமுற்றோருக்கு மாதம் 2500 ரூபாய் ஊதியம் 60 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் விதவைப் பெண்களுக்கு 2000 ரூபாய் நிதி உதவி போன்ற அறிவிப்புகள் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.
அதேபோல முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொதுமக்களிடையே பழகும் விதமும் அனைவரிடமும் வரவேற்பு பெற்றிருக்கிறது. ஒரு சாதாரண நபரிடம் கூட சாதாரணமாக பேசும் ஒரு சாமானிய முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி விளங்கி வருகிறார் என்று தெரிவிக்கிறார்கள்.அதேபோல எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலின் திமுக சார்பாக ஒன்றிணைவோம் வா மற்றும் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களின் ஆதரவை பெற முயற்சி செய்து வருகின்றார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி போலவே இவருக்கும் செல்லுமிடமெல்லாம் மிகப் பெரிய கூட்டம் கூடுகிறது.
அதேபோல திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்கான பணியினை திமுக தலைமையை வழங்கியிருக்கிறது. அதன்படி அவரும் தமிழகம் முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவதாக சொல்கிறார்கள்.இந்த நிலையில், இன்றைய தினம் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க இருக்கின்றார். இதுதொடர்பாக திமுகவின் தலைமை வெளியிட்டிருக்கின்றன அறிவிப்பு ஒன்றில்,
எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் 15-ஆம் தேதியன்று கருணாநிதி பிறந்த திருவாரூர் தெற்கு தெருவில் திருவாரூர் மற்றும் மன்னார்குடி நன்னிலம் ஆகிய மூன்று சட்டசபை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரிக்கும் விதமாக தன்னுடைய தேர்தல் பிரச்சார பயணத்தை ஆரம்பிக்கிறார் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி சார்பாக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் கழகத்தின் வேட்பாளர்கள் அதேபோல கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரிக்கும் விதமாக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரிப்பார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சென்னை கொளத்தூர் சட்டசபை தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். கடந்த 2011 ஆம் ஆண்டு முதலே அவர் அந்த தொகுதியில் போட்டியிட்டு வருகின்றார்.ஆனால் அந்தத் தொகுதியில் கடந்த 2011ஆம் ஆண்டு மற்றும் 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றாலும் அந்த கட்சி ஆட்சியில் அமர்வதற்கான வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது. இந்த நிலையில், இந்த முறை தேர்தலில் அறிவிப்பதற்கு முன்னரே இந்த ஆண்டு தேர்தலில் அவர் தொகுதியில் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டது.
அந்த வகையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி முதன் முதலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் இந்த முறை ஸ்டாலின் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்சமயம் அந்த தொகுதியில் ஸ்டாலினின் மகனும் திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.கடந்த இரண்டு முறையும் கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றாலும் அவருடைய கட்சியால் ஆட்சி அமைக்க முடியவில்லை. அதே நியூமராலஜி இந்த முறையும் தொடர்ந்தால் நிச்சயமாக திமுக ஆட்சிக்கு வருவது கடினம் என்று சொல்கிறார்கள்.