Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையின் சாதனையை உடைக்க வருகிறது புதிய சிலை! அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்!

பெரியார் வாதிகள் என்று சொல்லிக்கொண்டு மத சடங்குகளையும், தெய்வ நம்பிக்கை இருப்பவர்களையும், தாழ்த்தி பேசிக்கொண்டு தமிழகத்தில் ஒரு கூட்டம் அலைமோதிக் கொண்டு இருக்கிறது.

இன்னும் சொல்லப் போனால் அந்த பெரியார் ஆயுதத்தை வைத்து தான் தமிழகத்தில் அரசியலே சுழன்று கொண்டிருக்கிறது. தந்தை பெரியார் எவ்வளவோ நல்ல விஷயங்களை நாட்டிற்கு எடுத்துக் கூறி விட்டுச் சென்றிருக்கிறார். ஆனால் அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாத அந்த கூட்டம் கடவுள் இல்லை என்று அவர் சொன்ன அந்த ஒற்றை வாசகத்தை மட்டும் பிடித்துக் கொண்டு இதுவரையில் தொங்கிக் கொண்டே இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் தமிழகத்தில் பெரியாரிசம் இல்லை என்றால் அரசியலில் இல்லை என்ற நிலையில் ஒரு கூட்டம் சுற்றி திரிகிறது.

அந்தப் பெரியார் விஷத்தை வைத்து ஒரு சாராரை துன்புறுத்தும் வகையில் ஒரு சிலர் செயல்பட்டு வருகிறார்கள் ஆனாலும் அவர்களை நேரடியாக எதிர்க்க முடியாமல் பலர் தவித்து வருகிறார்கள். காரணம் ஒருவேளை அவர்களை எதிர்த்தால் இப்போது பெரியார் சொன்ன அந்த கடவுள் இல்லை என்ற வாசகத்தை விடுத்து அவர் சொல்லிக்கொண்டிருந்த பல நல்ல விஷயங்களை எடுத்துக்கூறி தங்களுக்கு பாதகமாக முடித்து வைத்து விடுவார்களோ என்ற அச்சம் எல்லோருடைய மனதிலும் எழத்தான் செய்கிறது.

இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டிலேயே மிக உயரமான சிலையாக சுமார் 133 அடியில் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை இருந்து வருகிறது. இந்த நிலையில் அதைவிட கூடுதலாக 135 அடி உயரம் கொண்டதாக பெரியார் சிலை அமைய இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஆகவே மாநிலத்தின் மிக உயரமான சிலை என்ற மதிப்பை தந்தை பெரியார் சிலை பெறவுள்ளது. திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் பல அதிரடி திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்து அதனை செயல்படுத்தி வருகிறார். அவருடைய அறிவுப்புகள் மக்களுடைய மனதில் மிகுந்த வரவேற்பையும், பாராட்டுதலையும், பெற்றிருக்கிறது. இந்த சூழ்நிலையில்தான் நேற்று முன்தினம் நடந்த சட்டசபை கூட்டத்தில் விதி எண் 110ன் கீழ் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார். பகுத்தறிவு தந்தை, அறிவுச்சுடர் தந்தை, பெரியாருக்கு 135 அடி உயரத்தில் சுமார் 100 கோடி ரூபாய் செலவில் சிலை அமைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்.

இது திராவிட இனப் பற்றாளர்கள் மற்றும் முற்போக்கு வாதிகளின் இடையில் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது. தமிழ்நாட்டில் பாஜகவும் பெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாளாக அறிவித்ததற்கு வரவேற்பு தெரிவித்து இருக்கிறது. இந்த சூழ்நிலையில், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருக்கின்ற திருச்சி, சிறுதாவூரில் சுமார் 40 அடி பீடத்தின் மீது பெரியாரின் 95 அடி உயர சிலை அமைய இருக்கிறது. ஆகவே மாநிலத்தின் மிக உயரமான சிலை மிக விரைவில் திருச்சி மாவட்டத்தில் இடம்பெற இருக்கிறது பெரியார் எத்தனை வருடங்கள் வாழ்ந்தார் என்பதை எடுத்துக் காட்டுவதற்காக சுயமரியாதை பிரச்சார இயக்கம் 95 அடி உயர சிலை வாழ்க்கை இருக்கிறது. தற்சமயம் சிலையை அமைக்க மாநில அரசு ஒப்புதல் வழங்கி இருக்கின்ற சூழ்நிலையில், அதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. அதே போல சுமார் 26 ஏக்கரில் பெரியார் உலகம் அமைய இருக்கிறது அதில் நூலகம் மற்றும் குழந்தைகள் பூங்கா போன்றவைகளும் இடம்பெற இருக்கிறது.

பெரியார் சிலை அமைக்கும் பணி மூன்று வருடங்களில் முடிவடையும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி அறிவித்திருக்கிறார். அதோடு சிலை வைக்கப்படும் என்று அறிவித்து அனுமதி வழங்கிய முதல்-அமைச்சருக்கு நன்றியை அவர் தெரிவித்திருக்கிறார். இதில் கவனிக்க கூடிய விஷயம் என்னவென்றால் கன்னியாகுமரியில் இருக்கின்ற ஒரு சிறிய தீவில் சுமார் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு மாநிலத்திலேயே மிக உயரமான உயரமான சிலை என்ற பெருமையை பெற்றிருந்தது. ஆனால் சுமார் 40 அடி உயர பீடத்தில் 95 அடி சிலை பெரியாருக்கு அமைய இருக்கின்ற நிலையில், மாநிலத்திலேயே மிக உயரமான சிலையாக இந்த பெரியார் சிலை அமைய இருக்கின்றது. திருச்சி சிறுகனூர் மத்திய சுற்றுலா தலமாகவும் மாறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இந்த தளம் கன்னியாகுமரி செல்லும் அதே நெடுஞ்சாலையில் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது

Exit mobile version