DMK: தந்தை பெரியார் நினைவு நாளான இன்று அவரது ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்த காரணத்தினால் திமுக-விற்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
திராவிட மாடல் ஆட்சியில் தந்தை பெரியாரின் நினைவு நாளான இன்று அவரது ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்திருப்பது பேசும் பொருளாக மாறியுள்ளது. சனாதன ஒழிப்பு என தொடங்கி இடதுசாரி என அனைத்தும் பெரியாரிசம் கீழ் தான் வரும். எப்படி இருக்க இந்த ஆட்சியில் பெரியாரின் நினைவு தினத்தை ஒவ்வொரு மாவட்டம் தோறும் எப்படி உபசரித்து இருக்க வேண்டும்.
ஆனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில், சிறுபான்மையினர் மக்களுக்கு உதவி புரியும் குறிப்பிட்டவர் மன்றத்தினர் தந்தை பெரியார் நினைவையொட்டி ஊர்வலத்திற்கு அனுமதி கோரியிருந்தனர். ஆனால் காஞ்சிபுரம் காவல்துறை இதனை மறுத்து ஆணை வெளியிட்டது.
இது குறித்து காஞ்சி மக்கள் மன்றத்தினர் கோஷங்கள் எழுப்பி ஆரவாரம் செய்தனர். மேற்கொண்டு திராவிட மாடல் ஆட்சியில் எப்படி பெரியாருக்கு முன்னுரிமை கொடுக்காமல் போகலாம் என மே 17 இயக்கம் பல கேள்விகளை முன் வைத்து வருகிறது.அவர்களோடு இடதுசாரி பெரியாரிஸ்ட் உள்ளிட்டோரும் திமுகவிற்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதெல்லாம் திராவிடம் மாடல் ஆட்சி தானா திமுக அரசு இதை பார்த்து என்ன செய்கிறது என்று பல்வேறு கேள்விகளை முன்வைக்கின்றனர். மக்களின் விளம்பரத்திற்காக திராவிட மாடல் என கூறிவிட்டு முற்றிலும் வலது சரியாக தங்களது செயல்முறைகளை காட்டுகிறது எனக் கூறி வருகின்றனர்.