Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சிறுநீரகக் கல் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு!!

#image_title

சிறுநீரகக் கல் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு!!

முறையற்ற உணவுப்பழக்க வழக்கத்தாலும் மாறிவரும் வாழ்வியலாலும் மனித உடலின் கழிவுகள் வெளியேறும் பாதையில் சிக்கல்கள் ஏற்படுகின்றன.

சிறுநீரகக் கல் பிரச்னை இதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இது உடலில் கொடூரமான வலியை ஏற்படுத்த வல்லது என்கிறார்கள் மருத்துவர்கள்.

சிறுநீரகம் அல்லது சிறுநீர்ப் பாதையில் அளவுக்கு அதிகமான யூரிக் அமிலம், கால்சியம் போன்ற தாது உப்புகள் தேங்குவதால் உருவாகும்

கற்களுக்கு சிறுநீரகக்கற்கள் என்று பெயர்.
இது தண்ணீர் அதிகமாக குடிக்காமல் இருப்பதாலும்,வறண்டு உணவுகளை எடுத்துக் கொள்வதாலும்,பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதாலும், உப்பு அதிகமாக உள்ள

உணவை உட்கொள்வதாலும் ஏற்படுகிறது. மேலும் வெளியில் அதிகமாக சுற்றுவதன் காரணமாகவும், ஏசியில் அதிகமாக இருப்பதன் காரணமாகவும் கூட சிறுநீரக கற்கள் உண்டாகலாம்.

வெகு நேரம் சிறுநீர் கழிக்காமல் இருப்பதாலும் சிறுநீரக கற்கள் தோன்றும்.
இதற்கு அறிகுறிகளாக தலை சுற்றுதல் தோல் வறண்டு போதல் தேமல் அரிப்பு போன்றவை ஏற்படும்.

இதற்கு சிறந்த ஆகாரமாக தண்ணீரில் இரவு தூங்குவதற்கு முன் மூலிகைகளை ஊற வைத்துவிட்டு மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் இதை குடித்து வந்தால் சிறுநீரக கல் பிரச்சனை வரவிடாமல் தடுக்கலாம்.

உணவில் ஃபாஸ்ட் ஃபுட் உணவு வகைகளை தவிர்த்து நாட்டு காய்கறிகளை உண்பது இதற்கு மிகவும் சிறந்த மருந்தாகும்.

சிறுநீரகக் கல் பிரச்சனை இருப்பவர்கள் அதிகாலையில் வெறும் வயிற்றில் இந்த மூலிகை கலந்து வைத்த தண்ணீர் அல்லது வெள்ளை பூசனை சாறு அல்லது வாழைத்தண்டு சாறை தொடர்ந்து பருகுவதால் இப் பிரச்சினையில் இருந்து தீர்வு காணலாம்.

இதிலிருந்து விடுபட நல்ல சத்துமிக்க உணவுகளையும், காய்கறிகளையும், புரோட்டின் மற்றும் பைபர் நிறைந்த உணவுகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் நீர்ச்சத்து அதிகமாக உள்ள காய்கறிகளை எடுத்துக் கொள்ள வேண்டும்

சித்த மருத்துவத்தில் சிறுநீரக கல் பிரச்சனைக்கு என்று மருந்துகள் உள்ளது அதை சாப்பிட்டு வந்தால் உடனடியாக குணம் பெறலாம்.

Exit mobile version