Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விக்கி கொடுத்த பர்மிஷன்.. மீண்டும் இணையும் சிம்பு நயன்!!

Permission given by Vicky.. Simbu Nayan reunites!!

Permission given by Vicky.. Simbu Nayan reunites!!

Cini Time: 9 ஆண்டுகள் கழித்து சிம்பு மற்றும் நயன்தாரா இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிம்பு மற்றும் நயன்தாரா கிடையே வல்லவன் படத்தில் நடித்ததன் மூலம் காதல் மலர்ந்தது. இது தொடர்ந்து இவர்களது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் இருவரும் கட்டாயம் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் அது காதல் தோல்வியிலேயே முடிந்தது. அப்படி இருக்கையில் இவர்கள் இருவரும் இனி இணைந்து நடிக்க வாய்ப்பே இல்லை என பலரும் பேசி வந்த நிலையில் அவர்களை வாயடைக்கும் வகையில் இது நம்ம ஆளு படத்தின் மூலம் மீண்டும் இணைந்தனர்.

இந்த சினிமா கேரியரில் இவர்கள் ஜோடியை இனி பார்க்க முடியாது என ரசிகர்கள் வருத்தமடைந்த நிலையில் தற்போது மீண்டும் இவர்கள் இணைய உள்ளனர். இயக்குனராக கோமாளி படத்தின் மூலம் அறிமுகமாகி தற்பொழுது ஹீரோவாக உள்ள ரங்கநாதன் நடித்த  டிராகன் படத்துடைய பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கிட்டத்தட்ட இருவரும் ஒன்பது ஆண்டுகள் கழித்து ஒரே மேடையில் சந்திக்க உள்ளனர். பிரதீப் நடிப்பில் வெளியாக இருக்கும் டிராகன் படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கியுள்ளார். இந்த படத்தில் லவ் ஃபெயிலியர் சாங் ஒன்றை சிம்பு பாடி இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் நயன்தாரா மற்றும் சிம்பு கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது.

Exit mobile version