Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிற மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வர அனுமதி:! தமிழக அரசின் அதிரடி தளர்வு!

பிற மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வர அனுமதி:! தமிழக அரசின் அதிரடி தளர்வு!

பயணங்கள் மேற்கொள்ளும் கொரோனா பாதிப்பு உடையவர்களை எளிதில் கண்டறிய தமிழகத்தில் இ-பாஸ் திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.தற்போது பொது மக்களின் பொருளாதார மேம்பாட்டை கருதி தமிழக அரசு இத்திட்டத்தில் பல தளர்வுகளை கொண்டுவந்துள்ளது.அதில் ஒன்றுதான்,வணிகரீதியாக பிற மாநிலங்களிலிருந்து தமிழகம் வந்து செல்ல அனுமதி வழங்கியுள்ளது தமிழக அரசு.

தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் இருந்து,வணிகம் ரீதியாக தமிழகத்திற்குள் வர நினைப்பவர்களுக்கு எந்தவித கட்டுப்பாடும் இன்றி அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும்,மேலும் அவ்வாறு அண்டை மாநிலத்தில் இருந்து வரும் வியாபாரிகள்,மூன்று நாட்களுக்குள் அவர்களது மாநிலத்திற்கு செல்பவர்களாக இருந்தால் அவர்களை தனிமைப் படுத்தப்படமாட்டாது என்றும்,தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Exit mobile version