அனுமதி கேட்ட புத்தக விற்பனையாளர் சங்கம் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கிய தமிழக அரசு! கட்டாயம் இது இருக்கணுமாம்!

0
108

தமிழக அரசுக்கு தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் செயலாளர் கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

சென்ற வருடம் நோய்த்தொற்று ஏற்பட்ட சூழ்நிலையில், பேரிடர் மேலாண்மை துறையில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி எந்தவிதமான பாதிப்புமின்றி புத்தக கண்காட்சி நடத்தி முடிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதே போல இந்த வருடமும் இந்த மாதம் 16ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 6ம் தேதி வரையில் 19 தினங்கள் புத்தக கண்காட்சியை நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் அரசு விதித்திருக்கும் கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு 1000 கடைகள் என்பதை 800 கடைகளாக குறைத்து நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும்.

நோய்த்தொற்று பரவாமல் இருப்பதற்காக சில கட்டுப்பாடுகளை கடைபிடிக்கவுள்ளதாகவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில், அந்த சங்கத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதுடன் கவனத்துடன் பரிசீலனை செய்து அந்த சங்கம் சார்பாக வரும் 16-ம் தேதியிலிருந்து மார்ச் மாதம் 6ம் தேதி வரை அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி புத்தக கண்காட்சி நடத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதி வழங்கி அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது.

ஆந்த நிபந்தனைகளின் அடிப்படையில், 65 வயதிற்கு மேற்பட்டோர், கர்ப்பிணிகள், கைக்குழந்தைகளை புத்தக கண்காட்சிக்கு அனுமதிக்கக்கூடாது. கவுண்டர்கள் மூலமாக நேரடியாக வழங்குவதற்கு பதிலாக இணையதளம் மூலமாக நுழைவுக்கட்டணம் வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வாசகர்கள் வந்து செல்வதற்கு வசதியாக கண்காட்சியின் 300 அரங்கிலும் இரண்டு வாசல்கள் வைக்கப்பட வேண்டும் என்றும், ஒரே சமயத்தில் ஒரு அரங்கில் 3 வாசகர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் எனவும், அரங்கில் குளிர்சாதன வசதி இருக்கக்கூடாது என்றும் கூறப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு வாசகருக்கும் 10 நிமிடம் முதல் 15 நிமிடங்கள் வரையில் உரிய சமூக இடைவெளியுடன் புத்தகங்களை பார்வையிடுவதற்கும், வாங்குவதற்கும், அனுமதி வழங்கலாம். காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரையில் கண்காட்சி நடத்தலாம். அரங்கத்தின் பணியாளர்கள் நிச்சயமாக கையுறை அணிந்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வாசலில் வைக்கப்பட்டிருக்கின்ற சோப் அல்லது கிருமிநாசினிகள் கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னர்தான் வாசகரை கங்காட்சிக்குள் அனுமதிக்க வேண்டும். ஒவ்வொரு அங்கத்திலும் கிருமிநாசினி வைக்கப்பட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதத்தில் தரையில் வட்ட குறியீடு போடப்பட்டிருக்க வேண்டும், கண்காட்சியில் இருக்கின்ற பகுதிகளில் கழிவறைகளை சரியான கால இடைவெளியில் சுத்தம் செய்ய வேண்டும். சமூக இடைவெளி விதிகளை நிச்சயமாக கடைபிடிக்க வேண்டும்.

அதுகுறித்து அறிவுரைகளை பொதுமக்களின் பார்வையில் படுமாறு வைத்திருக்க வேண்டும். ஒலிப்பெருக்கியிலும் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறைக்கு தனியாக ஒரு அரங்கத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும், வாசகர்கள் கையுறை அணிந்து வர பரிந்துரை செய்ய வேண்டும். வாசகர்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்டவற்றை உண்டாக்கித் தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

கண்காட்சி நிறைவடையும் ஒவ்வொரு தினத்திலும் அரங்கத்தை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். அரங்க பணியாளர்கள் உட்பட எல்லோரையும் வெப்பமானி, பல்ஸ் ஆக்ஸ் மீட்டர், உள்ளிட்டவத்றைக்கொண்டு பரிசோதித்த பிறகு தான் அரங்கத்திற்குள் அனுமதிக்க வேண்டும்.

எல்லோரும் முகக் கவசம் அணிய வேண்டும். குப்பை கொட்டுதல், எச்சில் துப்புதல், உள்ளிட்டவை தவிர்க்கப்படவேண்டும். உணவு குளிர்பானங்களை அரங்கிற்கு அனுமதிக்கக்கூடாது, தேவைப்படும் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.