Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தங்கத்தேர் இழுக்க அனுமதி!

உலக நாடுகளில் பரவிவரும் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.மேலும் மக்கள் அனைவரும் தனி நபர் இடைவெளி,மாஸ்க் அணிதல் போன்ற வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது.இந்நிலையில் கோவில்கள்,சுற்றுலா தலங்கள்,மால்கள் ஆகியவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆடி மாதத்தில் கோவில்களில் விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.எனவே நாளை ஆடி துவங்க இருப்பதால் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தங்கத்தேர் இழுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இந்த தங்க தேர் ஆனது ஜூலை 24 ஆம் தேதி இழுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் பக்தர்கள் இல்லாமல் தங்கத்தேர் இழுக்க சமய அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி அனுமதி வழங்கியுள்ளார்.இந்த விழா நாளை கொடியேற்றத்துடன் துவங்கி 9 நாள் ஆடிப்பூர திருவிழா நடைபெறும்

மேலும் இந்த திருவிழாவை அர்ச்சகர்கள் மட்டுமே நடத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கொடியேற்றம் மற்றும் தேரோட்ட காட்சிகள் யூடியூபில் வெளியிடப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version