பொதுத்தேர்வில் புத்தகத்தை பார்த்து எழுத அனுமதி! இணையத்தில் வைரலாகி வரும் ஆடியோ!
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்ததன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து போட்டி தேர்வுகளும், பொது தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது.
கடந்த ஆண்டு போட்டி தேர்வுகளும் நடத்தப்பட்டது. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டுக்கான 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு பொது தேர்வு நடத்த தேர்வு துறை முடிவு செய்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 13ஆம் தேதி முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு தேர்வு தொடங்கி நடைபெற்று வருகின்றது. மேலும் 14ஆம் தேதி பதினொன்றாம் வகுப்புக்கான பொது தேர்வு தொடங்கி நடைபெற்று வருகின்றது.
வரும் ஏப்ரல் ஆறாம் தேதி பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தொடங்க உள்ளது. இந்நிலையில் நடந்து முடிந்த 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் மொழிப்பாடத்தில் சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. மாணவர்கள் தேர்வு எழுத வராதா காரணம் குறித்து பள்ளி கல்வித்துறை ஆய்வு செய்து வருகின்றது.
இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அருகே வனவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு மையத்தில் கடந்த 20ஆம் தேதி பொறியியல் தேர்வு நடைபெற்றது. அப்போது அந்த தேர்வு மையத்தில் உள்ள ஒரு அறையில் சரியான படிக்காத மாணவர்களை மையத்தின் முதன்மை அலுவலர் புத்தகத்தை பார்த்து எழுத அனுமதித்துள்ளார்.
இதுகுறித்து ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகின்றது. அதில் உதவியாளர் ஒருவர் தொலைபேசி அழைப்பில் தேர்வு மைய முதன்மை அலுவலர் மாணவர்களை புத்தகத்தை பார்த்து எழுதுவதை நீங்கள் கண்டு கொள்ளவில்லை இது எல்லோருக்கும் பிரச்சனை ஆகிவிடும் என்று தெரிவித்துள்ளார்.
அதற்கு அந்த தேர்வு மையம் முதன்மை அதிகாரி மாணவர்களுக்கு பாடங்கள் தெரியாது அதனால் அவர்கள் எழுத்து தேர்ச்சி பெறட்டும் என்று விட்டுவிட்டேன் என்று கூறியுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த மாவட்டம் முதன்மை கல்வி அதிகாரி சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த விசாரணைக்கு பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.