ஜனாதிபதி மாளிகையை பார்வையிட அனுமதி! ஜூன் 1ம் தேதி முதல் மக்கள் பார்வையிடலாம்!!

0
146
#image_title
ஜனாதிபதி மாளிகையை பார்வையிட அனுமதி! ஜூன் 1ம் தேதி முதல் மக்கள் பார்வையிடலாம்!
வரும் ஜூன் மாதம் 1ம் தேதி முதல் ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜூன் 1ம் தேதி முதல் தொடர்ந்து 6 நாட்கள் மக்கள் பார்வைக்கு ஜனாதிபதி மாளிகை திறக்கப்படவுள்ளது.
ஏற்கனவே ஜனாதிபதி மாளிகை மக்கள் பார்வைக்கு திறந்துவிடப்பட்டது. பிரதான கட்டிடம், புல்வெளி பகுதி, அசோகா மண்டபம் ஆகியவை முதல் பகுதியாகவும், அருங்காட்சியக வளாகம் இரண்டாவது பகுதியாக பிரிக்கப்பட்டு மக்கள் பார்வைக்கு செவ்வாய் முதல் ஞாயிறு வரை 5 நாட்கள் மக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் ஜனாதிபதி மாளிகையின் அருங்காட்சியக வளாகத்தை திங்கள் கிழமை தவிர வாரத்தின் 6 நாட்களும் மக்கள் பார்வையிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 1ம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகின்றது. ஜனாதிபதி மாளிகையை பொதுமக்கள் காலை 9.30 மணிமுதல் மாலை 4.30 மணிவரை 7 தனித்தனியான நேரங்களில் பார்வையிடலாம் எனவும் மக்கள் இதை பார்வையிட ஆன்லைனில் முன்பதிவு செய்யவேண்டும் என்றும் அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.