சென்னை: அஜித் குமார் நடிப்பில் லைகா நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் உருவாகி வரும் படம்தான் விடா முயற்சி. இந்த படத்தில் அர்ஜுன், த்ரிஷா, ஆரவ் மற்றும் பலர் நடித்துள்ளனர். மேலும் இந்த படம் ரோட் திரில்லர் ஜானரில் எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் ஹாலிவுட் தரத்தில் எடுக்கப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் கிட்டத்தட்ட முடிந்த நிலையில் உள்ளது என படப்பிடிப்பு தளத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த படம் ஒரு நல்ல தரமான படம் இல்லாமல் படைப்பாக இருக்கும் என கருதப்படுகிறது. ஆனால் இந்த படம் கடந்த ஆண்டு அஜித் பிறந்தநாள் அன்று பூஜை ஆரமித்தது படக்குழுவினர் இப்போவரை எந்த ஒரு அப்டேட் வெளியிடாமல் படக்குழுவினர் இருந்து வந்த நிலையில் தற்போது படத்தின் டப்பிங் அஜித் முடித்துள்ளார். படம் தாமதம் அதற்க்கு முக்கிய காரணம் தற்போது குட் பேட் அகிலி படத்தில் வேறொரு கெட்டப்பில் இருந்ததால் தற்போது அந்த படமும் முடிந்தது.
மேலும் அந்த படத்தை முடித்து விட்டு அடுத்ததாக விடா முயச்சி படத்தை முடித்து கொடுப்பதாக கூறியிருந்த நிலையில் தற்போது அந்த படமும் முடிந்ததது. விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் அன்று வெளியாகும் என படக்குழுவினர் அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாக உள்ளது. மேலும் இந்த படத்தின் பாடல் இன்று (27/12/2024) மதியம் 1 மணிக்கு வெளியானது. இந்த பாடல் பாடலில் சமீபத்தில் டிரெண்டாக இருக்கும் சீமான் குரலில் இருங்க பாய் என்ற வசனம் பாடல் முழுக்க ஆங்காங்கே இடம்பெற்றுள்ளது கூடுதல் சிறப்பு. லிரிக் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அனிருத் இப்படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில் தெருக்குரல் அறிவு எழுதிய இந்த பாடலை ஆண்டனிதாசன் பாடியுள்ளார்.