தீராத சளி அல்லது நெஞ்சு சளியா!! எளிய தீர்வு!!

0
154
#image_title

தீராத சளி அல்லது நெஞ்சு சளியா!! எளிய தீர்வு!!

சளி என்பது வருடத்தின் எந்த நேரத்திலும் வரலாம். குளிர் காலத்தில் மட்டும்தான் சளி பிடிக்கும் என்பது மாறி எந்த காலகட்டமாக இருந்தாலும் சளி பிடிக்கும். சளி பொதுவாக ஒரு சுவாச நோய் என்று குறிப்பிடப்படுகிறது. இது பெரும்பாலும் இரண்டு வாரங்கள் சரியாகிவிடும். சளி ஒரு வாரம் நீடிக்கும் என்றாலும் மற்றவர்களுக்கு நோய் பரவும் அபாயம் அதிகம் என்பதால் சரியாகும் நாட்கள் வரை ஒருவர் கவனமாக இருக்க வேண்டும்.

சளியின் அறிகுறிகள்:

*தும்மல்

*இருமல்

*சோர்வு

*உடல் வலிகள்

*மூக்கடைப்பு

*தொண்டைப்புண்

சளி பொதுவாக மூன்று வாரங்களுக்கு மேல் நீடிக்கிறது என்றாலும் அல்லது சளி மற்றும் இருமலைத் தவிர வேறு ஏதேனும் அறிகுறிகள் இருந்தாலும் விரைவில் மருத்துவரை அணுகுவது நல்லது. சளி ஆபத்தை உண்டாக்கும் காரணியாகும். நீண்ட நாட்கள் சளி தீராமல் இருக்கையில் லேசான தோற்று, காசநோய், நுரையீரல் புற்றுநோய், மூச்சு குழாய் அலர்ஜி போன்ற நோய்களை சளி ஏற்படுத்துகிறது.

சளியை சரி செய்ய தேவையான பொருட்கள்:

1. கற்பூரவள்ளி

2. கல்லுப்பு

3. தேன்

பயன்படுத்தும் முறை:

கற்பூரவள்ளி சளியை மட்டும் சரி செய்வது மட்டுமல்லாமல் அதனுடன் நெஞ்செரிச்சல், அஜீரண கோளாறு, வாயு பிரச்சனை, மலச்சிக்கல் ரத்தம் சுத்தம் செய்தல் போன்று இன்னும் பல பிரச்சினைகளை சரி செய்கிறது.

கற்பூரவள்ளி இலை 4 இலையை எடுத்து தோசைக்கல் மேல் போட்டு சிறிது நேரம் வாட்டி எடுத்துக் கொள்ளவும். பின் இலையினுடைய சாறை பிழிந்து எடுத்துக் கொள்ளவும். சான்றுடன் இரண்டு கல் உப்பு மற்றும் கற்பூரவள்ளி இலை சாறு அளவிற்கு தேன் சேர்த்து பருகி வரலாம். காலை வெறும் வயிற்றிலும், இரவில் தூங்கும் முன் இதனை எடுத்துக் கொள்ளலாம். ஒரு நாளைக்கு மூன்று வேலை என்று வீதமும் இதனை எடுத்துக் கொள்ளலாம்.

இவ்வாறு இரண்டு அல்லது மூன்று நாளைக்கு செய்து வரும் போது சளி முற்றிலும் குணமாகிவிடும்.