Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

PERSONAL LOAN: பர்சனல் லோன் எடுக்க போறீங்களா? அப்போ இதை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!!

PERSONAL LOAN: Are you going to take a personal loan? Then you must know this!!

PERSONAL LOAN: Are you going to take a personal loan? Then you must know this!!

PERSONAL LOAN: பர்சனல் லோன் எடுக்க போறீங்களா? அப்போ இதை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!!

நம் நாட்டில் வங்கிகள் வாயிலாக கல்வி,தொழில்,திருமணம்,நிலம் வாங்குதல்,பிளாட்,மருத்துவ செலவு போன்ற காரணங்களுக்காக கடன் வழங்கப்படுகிறது.இதர கடன்களை ஒப்பிடுகையில் தனி நபர் கடன் பெறுவதற்கான வழிமுறைகள் எளிது.காரணம் இதில் அதிக வட்டி நிர்ணயம் செய்யப்படுகிறது.ஒருமுறை லோன் வாங்கினால் அதில் எவ்வித மாற்றமும் இன்றி வாங்கிய தொகை+நிர்ணயித்துள்ள வட்டியை உரிய நேரத்தில் செலுத்தியாக வேண்டும்.

தனிநபர் கடன் பெற தேவைப்படும் ஆவணங்கள்:

1)ஆதார் அட்டை
2)பான் கார்டு
3)கடன் பெறுவதற்கான முறையாக காரணம்
4)முகவரி சான்றிதழ்
5)வருமானம் குறித்த விவரம்
6)மொபைல் எண்

தற்பொழுது வங்கிகளில் 10% வட்டி விகிதத்தில் தனிநபர் கடன்களை வழங்கப்படுகிறது.தனிநபர் கடன்களுக்கு ஃபுளோட்டிங் வட்டி கிடையாது.ஏற்கனவே நிர்ணயம் செய்யப்பட்ட வட்டியை எவ்வித சமரசமும் இன்றி கட்ட வேண்டும்.தற்பொழுது தனி நபர் கடன்(Personal Loan) வாயிலாக தேவைக்கேற்ப ரூ.40,00,000 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.இவ்வாறு தனி நபர் கடன் வாங்க நினைப்பவர்கள் ஒவ்வொரு வங்கியில் வட்டி விகிதம் மற்றும் இதர விஷயங்கள் குறித்து ஆராய்ந்த பின்னர் கடன் பெற விண்ணப்பிப்பது நல்லது.

அதேபோல் கடன் வாங்கிய பின்னர் மாதந்தோறும் மாதந்தோறும் உரிய நாட்களில் EMI செலுத்துவதை தவறாமல் செய்து வர வேண்டும்.இல்லையேல் அபராதம் காட்டுவதோடு உங்கள் சிபில் ஸ்கோர் குறைய வாய்ப்பிருக்கிறது.நீங்கள் எந்த வங்கியில் கடன் பெறுவதாக இருந்தாலும் சரியான திட்டமிடல் செய்தால் வாங்கிய கடனை உரிய நேரத்தில் அடைத்து விட முடியும்.

Exit mobile version